Landmark Wiki

← கோபே: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அகாசி கைக்ஜோ

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அகாசி கைக்ஜோ
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அகாசி கைக்ஜோ என்றால் என்ன?

அகாசி கைக்ஜோ பாலம் உலகின் மிக நீளமான தொங்கு பாலங்களில் ஒன்றாகும்.

அகாசி கைக்ஜோ எங்கே உள்ளது?

கோபே; ஆயத்தொலைவு 34.6162, 135.0205.

இதன் கதை

அகாசி கைக்ஜோ பாலம் உலகின் மிக நீளமான தொங்கு பாலங்களில் ஒன்றாகும். இந்த பிரமாண்டமான பாலத்திற்கு (Pearl Bridge) பவள பாலம் என்ற மற்றய பெயரும் உண்டு. யப்பான் நாட்டின் முதன்மை நிலப்பகுதியிலுள்ள அகாசி (Akashi) பிரதேசத்தினையும் அவாஜி (Awaji) தீவினையும் இணைப்பதற்காக அகாசி நீரிணை (Akashi Strait) மேலாக இந்த பாலமானது கட்டப்பட்டுள்ளது. பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் தொடர்வண்டி (Rail) பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான 3 வழி (போக, வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது. கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு "அகாசி கைக்ஜோ" பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற "அகாசி கைக்ஜோ" கட்டுமானத்தின் போது 1995 ஜனவரி 17 ம் திகதி பூமியதிர்ச்சி (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் நீளம் ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.

கோபே: அருகிலுள்ள இடங்கள்

Suma Rikyu Park

9.8 km தொலைவில்

Taisan-ji

9.9 km தொலைவில்

Nagata Shrine

13.1 km தொலைவில்

Nōfuku-ji

15.0 km தொலைவில்

Minatogawa Shrine

15.9 km தொலைவில்

Kobe Port Tower

16.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.