Landmark Wiki

← அஸ்வான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அஸ்வான் அணை

நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணைகளைக் குறிப்பது

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அஸ்வான் அணை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அஸ்வான் அணை என்றால் என்ன?

அஸ்வான் அணை (Aswan Dam) எகிப்து நாட்டிலுள்ள நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணைகளைக் குறிக்கும்.

அஸ்வான் அணை எங்கே உள்ளது?

அஸ்வான்; ஆயத்தொலைவு 23.9706, 32.8778.

இதன் கதை

அஸ்வான் அணை (Aswan Dam) எகிப்து நாட்டிலுள்ள நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணைகளைக் குறிக்கும். இவை அஸ்வான் என்னும் நகரில் உள்ளன. இவற்றுள் புதிய அணை அஸ்வான் மேல் அணை எனவும், பழையது அஸ்வான் கீழ் அணை எனவும் அழைக்கப்படுகின்றன. 1950களிலிருந்து அசுவான் அணை என்ற பெயர் மேலணையையே குறிக்கின்றது. 1952 எகிப்தியப் புரட்சியை அடுத்து உருவான எகிப்திய அரசு நைல் ஆற்றினால் சுற்றுப் புறங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும், மின் உற்பத்தி செய்யவும், வேளாண்மைக்கு நீர் வழங்கவும் மேல் அணையைக் கட்டமைக்க திட்டமிட்டது. இது எகிப்தின் தொழில்மயமாக்கலுக்கு முதன்மைப் பங்காற்றியது. 1960க்கும் 1970க்கும் இடையே கட்டப்பட்ட அசுவான் மேல் அணை எகிப்தின் பொருளியல் வளர்சியிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நைல் ஆறு கட்டுப்படுத்தப்படாது இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் நீரினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இவ்வெள்ளம் நல்ல சத்துப் பொருட்களையும், கனிமங்களையும் கொண்டுவந்து நைலைச் சுற்றிய பகுதிகளை வளப்படுத்தும். இது தொன்மைக் காலங்களில் வேளாண்மைக்கு வாய்ப்பான நிலமாக விளங்கியது. ஆற்றோரப் பகுதிகளில் மக்கள்தொகை அதிகமானபோது, வேளாண்மை நிலங்களையும், பருத்திச் செய்கையையும் வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

அஸ்வான்: அருகிலுள்ள இடங்கள்

Philae temple complex

5.7 km தொலைவில்

Trajan's Kiosk

6.1 km தொலைவில்

Agilkia Island

6.1 km தொலைவில்

Aswan Low Dam

7.1 km தொலைவில்

Famine Stela

9.7 km தொலைவில்

Sehel Island

9.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.