Landmark Wiki

← அம்மான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அயின் காஜல் சிலைகள்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

அயின் காஜல் சிலைகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அயின் காஜல் சிலைகள் என்றால் என்ன?

அயின் காஜல் சிலைகள் ( Ain Ghazal Statues), பண்டைய அண்மை கிழக்கு பிரதேசத்தில் மேல் மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஜோர்தான் நாட்டின் தலைநகரமான அம்மான் நகரத்திற்கு அருகில் அயின் காஜல் எனும் தொல்லியல் களத்தில், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் கிமு 7,200 – கிமு 6,200-க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், சுண்ணாம்புக் கல் கலவை மற்றும் நாணல் புல்லினால் செய்து நிறுவப்பட்ட 15 சிலைகளின் தொகுதியாகும்.

அயின் காஜல் சிலைகள் எங்கே உள்ளது?

அம்மான்; ஆயத்தொலைவு 31.9880, 35.9760.

இதன் கதை

அயின் காஜல் சிலைகள் ( Ain Ghazal Statues), பண்டைய அண்மை கிழக்கு பிரதேசத்தில் மேல் மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஜோர்தான் நாட்டின் தலைநகரமான அம்மான் நகரத்திற்கு அருகில் அயின் காஜல் எனும் தொல்லியல் களத்தில், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் கிமு 7,200 – கிமு 6,200-க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், சுண்ணாம்புக் கல் கலவை மற்றும் நாணல் புல்லினால் செய்து நிறுவப்பட்ட 15 சிலைகளின் தொகுதியாகும். அயின் காஜல் பகுதியில் 1983 மற்றும் 1985 ஆண்டுகளில் மேற்கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் இத்தொன்மை வாய்ந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் அறிஞர்கள், அயின் காஜல் சிலைகளின் காலம், கிமு ஏழாயிரமாண்டின் நடுப்பகுதிக்கும், கிமு எட்டாயிரமாண்டின் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலம் எனக்கணித்துள்ளனர்.அயின் காஜல் சிலைகள் மேல் மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய, மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலக் கலைகளை எடுத்துரைக்கிறது. அயின் காஜல் சிலைகளில் பெரியது 1 மீட்டர் உயரமும், சிறியது 20 செண்டி மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.அயின் காஜல் சிலைகளில் சிலவற்றவை தற்போது ஜோர்தான் அருங்காட்சியகத்திலும், லூவர் அருங்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அம்மான்: அருகிலுள்ள இடங்கள்

Raghadan Palace

4.3 km தொலைவில்

Raghadan Flagpole

4.4 km தொலைவில்

King Abdullah II Special Operations Training Centre

4.9 km தொலைவில்

Odeon Theater

5.2 km தொலைவில்

Roman Theatre

5.3 km தொலைவில்

Amman Citadel

5.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.