← ஓமான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பகுலா கோட்டை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பகுலா கோட்டை என்றால் என்ன?
பகுலா கோட்டை (அரபி: قلعة بهلاء; ஒலிபெயர்ப்பு: கல்ஆ பஹ்லா) என்பது ஓமான் நாட்டின் பசும் மலை எனப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நான்கு கோட்டைகளுள் ஒன்றாகும்.
பகுலா கோட்டை எங்கே உள்ளது?
ஓமான்; ஆயத்தொலைவு 22.9642, 57.3011.
இதன் கதை
பகுலா கோட்டை (அரபி: قلعة بهلاء; ஒலிபெயர்ப்பு: கல்ஆ பஹ்லா) என்பது ஓமான் நாட்டின் பசும் மலை எனப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நான்கு கோட்டைகளுள் ஒன்றாகும். 13 ஆம், 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிற் பகுலா பாலைவனச் சோலைப் பகுதி பனூ நப்ஃகான் மரபினரின் ஆட்சியிற் செழித்திருந்த போதே இக்கோட்டை கட்டப்பட்டது. சிதைவடைந்த நிலையிற் காணப்படும் இக்கோட்டையின் சுவர்கள் அடித்தளத்திலிருந்து 165 அடி உயரம் கொண்டவையாகும். கோட்டையின் தென்மேற்குப் புறமாக 14 ஆம் நூற்றாண்டிற் கட்டப்பட்ட ஜுமுஆப் பள்ளிவாசல் ஒன்று அதன் செதுக்கப்பட்ட மிஃகுராபுடன் காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு வரையிலும் இக்கோட்டை மீளமைக்கப்படவோ அல்லது பாதுகாக்கப்படவோ இல்லை. அதன் காரணமாக, இது கைவிடப்பட்ட நிலையில் இருந்ததுடன் இக்கோட்டையின் சுவர்கள் மழைக்காலங்களில் இடிந்து விழுந்து கொண்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு இக்கோட்டை உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. பின்னர், 1988-இல் அழிவாய்ப்புள்ள உலக பாரம்பரியக் களங்கள் என்ற பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. இக்கோட்டையை மீளமைத்தல் நடவடிக்கைகள் 1990 களிற் தொடங்கப்பட்டன. 1993 முதல் 1999 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற இக்கோட்டையின் மீளமைத்தலுக்காக ஓமான் அரசாங்கம் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டிருக்கிறது.
ஓமான்: அருகிலுள்ள இடங்கள்
Aflaj Irrigation Systems of Oman
24.4 km தொலைவில்
Archaeological Sites of Bat, Al-Khutm and Al-Ayn
66.3 km தொலைவில்
Qalhat
213.7 km தொலைவில்
Mausoleum of Bibi Maryam
214.4 km தொலைவில்
Al Wusta Wildlife Reserve
364.3 km தொலைவில்
Land of Frankincense
647.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.