← ஈரான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பம், ஈரான்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பம், ஈரான் என்றால் என்ன?
பம் (Bam; பாரசீகம்: بم) என்பது ஈரான் கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ள பம் பிரிவின் தலைநகரும் நகருமாகும்.
பம், ஈரான் எங்கே உள்ளது?
ஈரான்; ஆயத்தொலைவு 29.0994, 58.3436.
இதன் கதை
பம் (Bam; பாரசீகம்: بم) என்பது ஈரான் கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ள பம் பிரிவின் தலைநகரும் நகருமாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதனுடைய மக்கள் தொகை 73,823 ஆகவும் 19,572 குடும்பங்களாகவும் காணப்பட்டன. தற்கால ஈரானின் பம் நகர் பம் அரணால் சூழப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வக் கணக்கெடுப்பின்படி, 2003 நிலநடுக்கத்திற்கு முன்பு நகரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 43,000 ஆக இருந்தது. அரணின் உருவாக்கம் காலம், காரணம் என்பன பற்றி பல கருத்துக்கள் காணப்படுகின்றன. பார்த்தீனியப் பேரரசினால் இது அமைக்கப்பட்டது என்ற கருத்து உள்ளது. பொருளாதார, வர்த்தக ரீதியாக பிரதேசத்தில் மிக முக்கிய இடமாக உள்ளதுடன் இதன் துணிகளும் ஆடைகளும் புகழ் பெற்றவை. அராபிய பயணியும் நிலவியலாளருமான இபின் கவ்கால் (943–977) தன் நூலான "சுரட் உல் ஆர்ட்" (உலக உருவம்) என்பதில் பின்வருமாறு பம் பற்றி எழுதியுள்ளார்: அங்கே சிறந்த, அழகான, நீண்ட காலம் இருக்கக்கூடிய பருத்தி ஆடைகள் உலகிலுள்ள அரண்மனைகளுக்கு எல்லாம் அனுப்பப்படுகிறது. அங்கே அவை சிறந்த துணிகளால் உருவாக்கப்பட்டு, ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 30 தினார்களுக்கு விற்கப்படுகின்றன. அவை குரோசான் மாகாணம், ஈராக், எகிப்து ஆகிய இடங்களில் விற்கப்பட்டன. பண்டைய அர்கே பம் அரண் 2000 வருடங்களுக்கு முன்னான ஒரு வரலாற்றை பார்த்தீனியப் பேரரசின் காலத்தில் (248 கி.மு–224 கி.பி) கொண்டுள்ளது.
ஈரான்: அருகிலுள்ள இடங்கள்
Arg-e Bam
3.1 km தொலைவில்
Lut Desert
181.4 km தொலைவில்
Meymand, Kerman
313.1 km தொலைவில்
Shahr-e Sukhteh
332.3 km தொலைவில்
Pasargadae
513.8 km தொலைவில்
Valerian Palace
659.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.