Landmark Wiki

← அலெசாந்திரியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அலெக்சாந்திரியா நூலகம்

எகிப்திலுள்ள ஒரு நூலகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அலெக்சாந்திரியா நூலகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அலெக்சாந்திரியா நூலகம் என்றால் என்ன?

2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அலெக்சாந்திரியா நூலகம் (English: Library of Alexandria; மிசிரி மொழி: مكتبة الإسكندرية Maktabat El-Iskandarīyah, Egyptian Arabic: [mækˈtæb(e)t eskendeˈɾejjæ]) எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியா நகரில் நடுநிலக்கடலின் கரையில் அமைந்த ஒரு முக்கியமான நூலகமும், பண்பாட்டு மையமும் ஆகும்.

அலெக்சாந்திரியா நூலகம் எங்கே உள்ளது?

அலெசாந்திரியா; ஆயத்தொலைவு 31.2089, 29.9092.

இதன் கதை

2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அலெக்சாந்திரியா நூலகம் (English: Library of Alexandria; மிசிரி மொழி: مكتبة الإسكندرية Maktabat El-Iskandarīyah, Egyptian Arabic: [mækˈtæb(e)t eskendeˈɾejjæ]) எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியா நகரில் நடுநிலக்கடலின் கரையில் அமைந்த ஒரு முக்கியமான நூலகமும், பண்பாட்டு மையமும் ஆகும். இது அழிந்துபோன பழங்கால அலெக்சாந்திரியா நூலகத்தின் நினைவாகவும், பழைய கல்விக்கான மையம் வெளிப்படுத்திய விளக்கத்தையும், கல்வித் திறனையும் புதுப்பிப்பதற்கான முயற்சியாகவும் உருவாக்கப்பட்டது. பழைய நூலகத்தை மீள்விக்கும் எண்ணம் 1974 ஆம் ஆண்டில், அலெக்சாந்திரியாப் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு புதிய நூலகக் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு நிலம் வாங்கியபோது உருவானது. கட்டுமான வேலைகள் 1995 ஆம் ஆண்டில் தொடங்கின. 220 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர்கள் செலவிட்ட பின்னர் 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 இல் நூலகம் முறைப்படி திறக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய நூலகம் 500,000 நூல்களைக் கொடையாக வழங்கியது. இந்த நன்கொடை அலெக்சாந்திரியா நூலகத்தை உலகின் ஐந்தாவது பெரிய பிரெஞ்சு மொழி நூலகம் ஆக்கியது. இந்த நூலகத்தில் 8 மில்லியன் நூல்களை வைப்பதற்கான தட்டு அடுக்கு வசதிகள் உள்ளன. இதன் முதன்மை வாசிப்பு மண்டபம் 20,000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது.

அலெசாந்திரியா: அருகிலுள்ள இடங்கள்

Shallalat Gardens

790 m தொலைவில்

Al-Qaed Ibrahim Mosque

800 m தொலைவில்

Alexandria National Museum

950 m தொலைவில்

Mausoleum of Abdullah ibn Ali Zayn al-Abidin

1.1 km தொலைவில்

Graeco-Roman Museum

1.1 km தொலைவில்

Caesareum of Alexandria

1.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.