Landmark Wiki

← பிரசிலியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிரேசில் தேசியப் பேராயம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பிரேசில் தேசியப் பேராயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிரேசில் தேசியப் பேராயம் என்றால் என்ன?

பிரேசில் தேசியப் பேராயம் (போர்த்துக்கீசம்: Congresso Nacional do Brasil) பிரேசிலின் கூட்டாட்சி அரசின் சட்டவாக்க அவை ஆகும்.

பிரேசில் தேசியப் பேராயம் எங்கே உள்ளது?

பிரசிலியா; ஆயத்தொலைவு -15.7997, -47.8642.

இதன் கதை

பிரேசில் தேசியப் பேராயம் (போர்த்துக்கீசம்: Congresso Nacional do Brasil) பிரேசிலின் கூட்டாட்சி அரசின் சட்டவாக்க அவை ஆகும். மாநிலங்கள் மற்றும் நகர மன்றங்களில் ஓரவை முறைமையே இருக்க கூட்டாட்சிப் பேராயம் ஈரவை முறைமையைப் பின்பற்றுகின்றது. பிரேசிலின் செனட்டு என்ற மேலவையும் சாம்பர் ஆஃப் டெபுடீசு என்ற கீழவையும் பேராயத்தின் அங்கங்களாக உள்ளன. செனட்டில் 26 மாநிலங்களுக்கும் கூட்டரசு மாவட்டத்திற்கும் சார்பான உறுப்பினர்கள் உள்ளனர்; ஒவ்வொரு மாநிலம்/கூட்டரசு மாவட்டமும் தலா மூன்று உறுப்பினர்களை பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும். இவர்களது பதவிக்காலம் எட்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை மூன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மாற்றப்படுகின்றனர். ஒரு மாநிலத்தில் ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கு வழங்கப்படுகிறது; ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும்போது வாக்காளருக்கு இரு வாக்குகள் வழங்கப்படுகின்றது. அச்சமயம் வாக்காளர் தனது இரு வாக்குகளையும் ஒருவருக்கே அளிக்கவியலாது. ஆனால் மூன்றில் இரண்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கும்போது அரசியல் கட்சிகள் இரு வேட்பாளர்களை நிறுத்தலாம்.

பிரசிலியா: அருகிலுள்ள இடங்கள்

Praça dos Três Poderes

320 m தொலைவில்

Palácio do Planalto

360 m தொலைவில்

Tancredo Neves Pantheon of the Fatherland and Freedom

460 m தொலைவில்

பிராசீலியா பேராலயம்

1.2 km தொலைவில்

Cultural Complex of the Republic

1.7 km தொலைவில்

Cláudio Santoro National Theater

1.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.