Landmark Wiki

← இலண்டன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிரித்தானிய அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பிரித்தானிய அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிரித்தானிய அருங்காட்சியகம் என்றால் என்ன?

பிரித்தானிய அருங்காட்சியகம் என்பது இலண்டனில் அமைந்துள்ள, மனித வரலாறு, பண்பாடு என்பன தொடர்பான அருங்காட்சியகம் ஆகும்.

பிரித்தானிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

இலண்டன்; ஆயத்தொலைவு 51.5194, -0.1269.

இதன் கதை

பிரித்தானிய அருங்காட்சியகம் என்பது இலண்டனில் அமைந்துள்ள, மனித வரலாறு, பண்பாடு என்பன தொடர்பான அருங்காட்சியகம் ஆகும். 7 மில்லியன்களுக்கு மேற்பட்ட காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் மிகவும் பெரியதும், முழுமையானதும் ஆகும். உலகின் எல்லாக் கண்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட இங்குள்ள காட்சிப் பொருட்கள் மனிதப் பண்பாட்டின் கதையை அதன் தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரை விளக்கி ஆவணப்படுத்துகின்றன. இந்த அருங்காட்சியகம், மருத்துவரும் அறிவியலாளருமான சர் ஆன்சு சுலோன் (Sir Hans Sloane) என்பவரின் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 1700 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புளூம்சுபரியில், இன்றைய அருங்காட்சியகம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த மான்டேகு இல்லத்தில் இருந்த இந்த அருங்காட்சியகம் 1759 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதற்குப் பிற்பட்ட இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் இது பல கிளை நிறுவனங்களைக் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது. இவற்றுள் தென் கென்சிங்டனில் 1887 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரித்தானிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் முதலாவது ஆகும். 1997 ஆம் ஆண்டில் பிரித்தானிய நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்படும் வரை, அருங்காட்சியகமும், தேசிய நூலகமும் ஒரே கட்டடத்திலேயே இயங்கிவந்தன.

இலண்டன்: அருகிலுள்ள இடங்கள்

Royal Opera House

760 m தொலைவில்

Covent Garden

830 m தொலைவில்

Leicester Square

1.0 km தொலைவில்

National Portrait Gallery

1.1 km தொலைவில்

St Martin-in-the-Fields

1.2 km தொலைவில்

லண்டன் தேசிய அருங்காட்சியகம்

1.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.