← கிரேக்கம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தெலொசு
கிரேக்கத் தீவு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தெலொசு என்றால் என்ன?
டெலொஸ் தீவு (Delos) என்பது சைக்லேட்ஸ் தீவுக்கூட்டத்தின் மையத்திற்கு அருகில் உள்ள மைக்கோனோஸ் அருகே உள்ள ஒரு தீவு ஆகும்.
தெலொசு எங்கே உள்ளது?
கிரேக்கம்; ஆயத்தொலைவு 37.3933, 25.2711.
இதன் கதை
டெலொஸ் தீவு (Delos) என்பது சைக்லேட்ஸ் தீவுக்கூட்டத்தின் மையத்திற்கு அருகில் உள்ள மைக்கோனோஸ் அருகே உள்ள ஒரு தீவு ஆகும். இது கிரேக்கத்தின் மிக முக்கியமான தொன்மவியல், வரலாற்று, தொல்லியல் தளங்களில் ஒன்றாகும். தீவில் நடந்த அகழ்வாய்வுகள் மத்தியதரைக் கடலில் மிகவும் முக்கியமானவை. எபோரேட் ஆஃப் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் சைக்லேட்ஸின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பல கலைப்பொருட்கள் டெலோஸ் தொல்லியல் அருங்காட்சியகம் மற்றும் ஏதென்ஸின் தேசிய தொல்லியல் அருங்காட்சியகம் போன்றவற்றி்ல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பியன் கிரேக்கத் தொன்மவியலின் படி அப்பல்லோ மற்றும் ஆர்ட்டெமிசு ஆகியோரின் பிறப்பிடமாக இத்தீவு கருதப்படுகிறது. டெலோஸ் தீவு சுமார் ஒரு ஆயிரமாண்டு காலத்திற்கு ஒரு புனித இடமாக இருந்தது. இதன் புனிதத் துறைமுகத்தில் இருந்து, அடிவானம் மூன்று கூம்பு வடிவ மேடுகளைக் கொண்டதாக உள்ளது. அவை இறைவியின் புனித நிலப்பரப்புகளை அடையாளம் காட்டுவதாக (இறைவியின் பெயர் ஏதெனா என்று கணிக்கப்பட்டுள்ளது) உள்ளது. 1990 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ டெலோசை உலகப் பாரம்பரியக் களமாக பட்டியில் இட்டுள்ளது. இது "விதிவிலக்காக விரிவான மற்றும் பலபொருட்கள் கொண்ட" தொல்லியல் தளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரேக்கம்: அருகிலுள்ள இடங்கள்
Sanctuary of Asclepius, Epidaurus
195.1 km தொலைவில்
Malia (archaeological site)
234.3 km தொலைவில்
Minoan palaces
241.0 km தொலைவில்
Mystras
258.2 km தொலைவில்
Medieval City of Rhodes
282.8 km தொலைவில்
Bassae
297.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.