← உலான் பத்தூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை
புகழ் பெற்ற செங்கிஸ் கான் சிலை
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை என்றால் என்ன?
செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை என்பது 40 மீட்டர் உயரமுடைய துருவேறா எஃகுவால் செய்யப்பட்ட செங்கிஸ் கானின் சிலையாகும்.
செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை எங்கே உள்ளது?
உலான் பத்தூர்; ஆயத்தொலைவு 47.8081, 107.5298.
இதன் கதை
செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை என்பது 40 மீட்டர் உயரமுடைய துருவேறா எஃகுவால் செய்யப்பட்ட செங்கிஸ் கானின் சிலையாகும். இச்சிலை உலகிலேயே மிக உயரமான குதிரையேற்றச் சிலையாகும். இது தூல் ஆற்றின் கரையில் திசோஞ்சின் போல்தோக் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் மங்கோலியத் தலைநகரான உலான் பத்தூருக்கு 54 கிலோ மீட்டர் கிழக்கே அமைந்துள்ளது. ஒரு புராணக் கதையின் படி, இங்கு தான் செங்கிஸ் கான் ஒரு தங்கக் குதிரைச் சாட்டையைக் கண்டெடுத்தார். சிலையானது ஒரு அடையாளமாக இவர் பிறந்த இடத்தை நோக்கிக் கிழக்கே திரும்பியுள்ளது. செங்கிஸ் கான் சிலை வளாகத்தின் மேல் இச்சிலை அமைந்துள்ளது. இந்த வளாகத்திற்குப் பலர் வருகை புரிகின்றனர். இந்த வளாகமும் கூட 10 மீட்டர் உயரமுடையதாகும். இந்த வளாகத்தில் 36 தூண்கள் உள்ளன. செங்கிஸ் கான் முதல் லிக்டன் கான் வரையிலான 36 கான்களை இந்தத் தூண்கள் குறிக்கின்றன. இதைச் சிற்பி எர்தெம்பிலேக் மற்றும் கட்டட வடிவமைப்பாளர் எங்சர்கல் ஆகியோர் வடிவமைத்தனர். இச்சிலை 2008ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இங்கு வருகை புரிபவர்கள் குதிரையின் தலைக்கு அதன் மார்பு மற்றும் கழுத்து வழியாக நடந்து செல்கின்றனர். அங்கு அவர்கள் காட்சிகளைக் கண்டு இரசிக்கலாம். இந்தச் சிலைப் பகுதியைச் சுற்றி 200 கெர்கள் உள்ளன.
உலான் பத்தூர்: அருகிலுள்ள இடங்கள்
Bogd Khan Mountain
40.6 km தொலைவில்
Saints Peter and Paul Cathedral
42.9 km தொலைவில்
Bogd Khan Uul Biosphere Reserve
43.3 km தொலைவில்
Holy Trinity Church
44.2 km தொலைவில்
Marshall Zhukov House Museum
44.7 km தொலைவில்
Mongolian Military Museum
44.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.