Landmark Wiki

← பெய்சிங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தடுக்கப்பட்ட நகர்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தடுக்கப்பட்ட நகர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தடுக்கப்பட்ட நகர் என்றால் என்ன?

தடுக்கப்பட்ட நகர் (ஆங்கிலம்: Forbidden City; சீனம்: 紫禁城; பின்யின்: Zǐjinchéng) அல்லது பெய்சிங் அரச அரண்மனை (Beijing's Imperial Palace) அல்லது அரண்மனை அருங்காட்சியகம் எனப்படுவது சீன தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள, பழம்பெருமை வாய்ந்த அரண்மனை வளாகமும் சீனாவின் அரசு மாளிகை கட்டிடங்களில் ஒன்றுமாகும்.

தடுக்கப்பட்ட நகர் எங்கே உள்ளது?

பெய்சிங்; ஆயத்தொலைவு 39.9158, 116.3908.

இதன் கதை

தடுக்கப்பட்ட நகர் (ஆங்கிலம்: Forbidden City; சீனம்: 紫禁城; பின்யின்: Zǐjinchéng) அல்லது பெய்சிங் அரச அரண்மனை (Beijing's Imperial Palace) அல்லது அரண்மனை அருங்காட்சியகம் எனப்படுவது சீன தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள, பழம்பெருமை வாய்ந்த அரண்மனை வளாகமும் சீனாவின் அரசு மாளிகை கட்டிடங்களில் ஒன்றுமாகும். சீன மாண்டரின் மொழியில் கு-காங்க் என அழைக்கப்படும் இது மிங் மற்றும் கிங் பேரரசுகளின் அதிகார மையமாக கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் வரை செயல்பட்டது. ஆட்சி மாற்றம், போர் ஆகியவற்றின் காரணமாக, சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட பண்டைக்கால அரண்மனைகளுள் பெய்சிங் அரண்மனையும் ஒன்றாகும். பெய்ஜிங் நகரின் நடுநாயகமாக விளங்கும் இவ்வரண்மனை சீனாவின் பண்பாட்டை விளக்கும் மரபுச் சின்னமாகும். கி.பி. 1925 முதல் சீன அரண்மனை அருங்காட்சியகமாக விளங்கும் பெய்ஜிங் அரண்மனையின் கட்டிடப்பாணி கிழக்கு ஆசியா மற்றும் பிற கட்டடக்கலைப் பண்பாட்டு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1987 இல் ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. 74 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இதுவே உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகம் ஆகும். மிங் வம்ச மற்றும் சிங் வம்ச பேரரசர்களின் அரசு மாளிகையாக இருந்த பெய்சிங் அரண்மனை உலகின் பாதுகாக்கப்பட்ட பண்டைய மர கட்டமைப்புகளின் மிகப் பெரிய தொகுப்பாக யுனெஸ்கோ மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது.

பெய்சிங்: அருகிலுள்ள இடங்கள்

Palace Museum

120 m தொலைவில்

Imperial Ancestral Temple

690 m தொலைவில்

Jingshan Park

870 m தொலைவில்

Tiananmen

950 m தொலைவில்

Beihai Park

1.2 km தொலைவில்

St. Joseph's Church

1.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.