Landmark Wiki

← பில்போ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குகென்ஹெயிம் அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

குகென்ஹெயிம் அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குகென்ஹெயிம் அருங்காட்சியகம் என்றால் என்ன?

குகென்ஹெயிம் நூதனசாலை பில்போ ஸ்பெயின், பாஸ்க் நாட்டிலுள்ள பில்போவில் அமைந்துள்ள, ஒரு நவீனஓவிய நூதனசாலையாகும்.

குகென்ஹெயிம் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

பில்போ; ஆயத்தொலைவு 43.2686, -2.9339.

இதன் கதை

குகென்ஹெயிம் நூதனசாலை பில்போ ஸ்பெயின், பாஸ்க் நாட்டிலுள்ள பில்போவில் அமைந்துள்ள, ஒரு நவீனஓவிய நூதனசாலையாகும். இது, சொலொமன். ஆர் குகென்ஹெயிம் பவுண்டேஷன் நிறுவனத்தின் பல நூதனசாலைகளுள் ஒன்றாகும். பிராங்க் கெரி (Frank Gehry) என்னும் கட்டிடக்கலைஞருடைய நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடம், 1997ல் பொதுமக்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டதுமே, உலகின் கவர்ச்சிகரமான, நவீன கட்டிடங்களிலொன்றாகப் பிரபலமானது. இந்த நூதனசாலையின் வடிவமைப்பும், கட்டுமானமும், பிராங்க் கெரியின் பாணியினதும், வழிமுறைகளினதும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கெரியின் மற்ற கட்டிடங்களைப் போலவே, இக் கட்டிடமும், தீவிர சிற்பத்தன்மையுடையதாகவும், இயல்பான வளைவுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. முழுக்கட்டிடத்தில் எங்கேயுமே தட்டையான மேற்பரப்பு இல்லையென்று கூறப்படுகிறது. நெடுஞ்சாலைப் பாலமொன்று கட்டிடத்தின் ஒரு பகுதிக்குக் குறுக்கே செல்கிறது, கட்டிடத்தின் பெரும் பகுதி, கடதாசித் தடிப்புள்ள டைட்டேனியம் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கட்டிடம், துறைமுக நகரமொன்றில் அமைக்கப்பட்டதால், ஒரு கப்பலைப்போலத் தோன்றவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மினுக்கமான தகடுகள் மீன் செதில்களை ஒத்துள்ளன.

பில்போ: அருகிலுள்ள இடங்கள்

La Salve

190 m தொலைவில்

Museo de Bellas Artes de Bilbao

430 m தொலைவில்

Zubizuri

540 m தொலைவில்

Deusto Bridge

550 m தொலைவில்

Chavarri Palace

600 m தொலைவில்

Plaza Elíptica

630 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.