Landmark Wiki

← Orlando: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஹாக்வார்ட் புகைரதம்

பிற மொழிகள்: English · 中文

ஹாக்வார்ட் புகைரதம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஹாக்வார்ட் புகைரதம் என்றால் என்ன?

ஹாக்வார்ட் புகைரதம் (Hogwarts Express (Universal Orlando Resort)) என்பது 1,800 மிமீ (5 அடி 10 7/8 அங்குலம்) அகல இரயில் பாதை உடைய ஒரு பொழுதுபோக்கு இரயில்வே ஆகும்.

ஹாக்வார்ட் புகைரதம் எங்கே உள்ளது?

Orlando; ஆயத்தொலைவு 28.4765, -81.4706.

இதன் கதை

ஹாக்வார்ட் புகைரதம் (Hogwarts Express (Universal Orlando Resort)) என்பது 1,800 மிமீ (5 அடி 10 7/8 அங்குலம்) அகல இரயில் பாதை உடைய ஒரு பொழுதுபோக்கு இரயில்வே ஆகும். ஐக்கிய அமெரிக்க நாட்டிவன் ஒர்லாண்டோவில் உள்ள யுனிவர்சல் ஆர்லாண்டோ ரிசார்ட்டில் இயக்கப்படுகிறது. இந்த புகைரத பாதை 676 மீட்டர் (2,218 அடி) ஹோக்ஸ்மிடு நிலையத்தில் இருந்து கிங்க்ஸ் கிராஸ் நிலையம் வரை இயக்கப்படும் ஒரு பொழுதுபோக்கு புகைரதம் ஆகும். டோப்பல்மேயர் கார்வன்டா குழு மூலம் தயாரிக்கப்பட்ட இந்த அமைப்பு ஹோக்வார்ட் எக்ஸ்பிரஸின் இரண்டு பிரதிகளுடன் செயல்படுகிறது. பயணத்தின் இரண்டு திசைகள் இரண்டு வேறுபட்ட ஒளிப்பதிவுகளை காட்டுகின்றன. இரண்டு தனித்தனி பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ள இரயில் நிலையங்களுக்கு இடையே இரயிலில் பயண விருந்தினர்கள் செல்வதால் பயணிகளின் இரு போழுதுபோக்கு பூங்காக்களின் நுழைவுச்சீட்டுகளும் ஆய்வாளரால் பயணத்தின் போது பரிசோதிகப்படுகிறது. ஹாக்வார்ட் புகைரதம் ஜூலை மாதம் 1 ஆம் நாள் 2014 ஆம் ஆண்டு அன்று பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திறக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக இயக்கிய பின் ஏழு நாட்கள் கழித்து டியாகான் அலியின் விரிவாக்கத்துடன் மற்றொன்று திறக்கப்பட்டது. இந்த சேவையானது உடனடியாக பிரபலமடைந்தது. ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் பயணிகள் பயனடைந்தனர்.

Orlando: அருகிலுள்ள இடங்கள்

Revenge of the Mummy

80 m தொலைவில்

Despicable Me Minion Mayhem

280 m தொலைவில்

Jaws (ride)

380 m தொலைவில்

Universal Studios Florida

380 m தொலைவில்

E.T. Adventure

420 m தொலைவில்

Harry Potter and the Escape from Gringotts

420 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.