← ரெய்க்யவிக்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஐசுலாந்தின் ஆண்மையியல் அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஐசுலாந்தின் ஆண்மையியல் அருங்காட்சியகம் என்றால் என்ன?
ஐசுலாந்தின் ஆண்மையியல் அருங்காட்சியகம் (Icelandic Phallological Museum, இசுலேன்சுக மொழி:Hið Íslenzka Reðasafn), ஐசுலாந்தின் ரெய்க்யவிக்கில் ஆண்குறிகளையும் ஆண்குறி உள்ளுறுப்புக்களையும் காட்சிப்படுத்தியுள்ள உலகின் மிகப்பெரும் அருங்காட்சியாகும்.
ஐசுலாந்தின் ஆண்மையியல் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
ரெய்க்யவிக்; ஆயத்தொலைவு 64.1486, -21.9358.
இதன் கதை
ஐசுலாந்தின் ஆண்மையியல் அருங்காட்சியகம் (Icelandic Phallological Museum, இசுலேன்சுக மொழி:Hið Íslenzka Reðasafn), ஐசுலாந்தின் ரெய்க்யவிக்கில் ஆண்குறிகளையும் ஆண்குறி உள்ளுறுப்புக்களையும் காட்சிப்படுத்தியுள்ள உலகின் மிகப்பெரும் அருங்காட்சியாகும். 93 உயிரினங்களின் 280 மாதிரிகள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளது; திமிங்கலங்களிலிருந்து 55 ஆண்குறிகளும் சீல்களிலிருந்து 36 ஆண்குறிகளும் நிலப்பரப்பு பாலூட்டிகளிலிருந்து 118 ஆண்குறிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2011 சூலையில் தனது முதல் மனித ஆண்குறியைப் பெற்றது. உறுதிமொழி கொடுத்திருந்த நான்கு கொடையாளிகளிலிருந்து ஒருவரிடமிருந்து பெறப்பட்டது. கொடையாளியின் உடலில் இருந்து ஆண்குறியைப் பிரித்தெடுப்பது திட்டமிட்டபடி செல்லாததால் பழுப்புநிற வாடி வதங்கிய சதைத்துண்டமாக பார்மால்டிஹைடு ஜாடி ஒன்றில் ஊறவைக்கப்பட்டுள்ளது. இன்னமும் "இளைய வயதுக்காரரின் பெரிய மற்றும் நல்ல" ஒன்றிற்காக அருங்காட்சியகம் தேடி வருகிறது. சிகுரோர் யார்டார்சான் என்ற ஆசிரியரால் 1997இல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை அவரது மகன் யோர்ட்டூர் கிசுலி சிகுரோசான் நடத்தி வருகிறார். சிகுரோருக்கு சிறுவயதில் கொடுக்கப்பட்ட எருதின் ஆண்குறியிலிருந்து வேயப்பட்ட மாட்டுச் சாட்டையே இத்தகைய ஆண்குறிகளில் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டியது.
ரெய்க்யவிக்: அருகிலுள்ள இடங்கள்
Arnarhóll
120 m தொலைவில்
Kolaportið
140 m தொலைவில்
Safnahúsið
220 m தொலைவில்
Reykjavik Art Museum
240 m தொலைவில்
Harpa (concert hall)
250 m தொலைவில்
Austurvöllur
250 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.