Landmark Wiki

← பாரிசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாவரங்களின் தோட்டம்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

தாவரங்களின் தோட்டம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாவரங்களின் தோட்டம் என்றால் என்ன?

தாவரங்களின் தோட்டம், பிரான்சு (பிரான்சியம்: Jardin des plantes அல்லது Jardin des plantes de Paris (பிரெஞ்சு மொழி: [ʒaʁdɛ̃ dɛ plɑ̃t də paʁi])) என்பது பிரான்சு நாட்டின் பாரிசு நகரிலுள்ள தாவரவியல் பூங்கா ஆகும்.

தாவரங்களின் தோட்டம் எங்கே உள்ளது?

பாரிசு; ஆயத்தொலைவு 48.8439, 2.3597.

இதன் கதை

தாவரங்களின் தோட்டம், பிரான்சு (பிரான்சியம்: Jardin des plantes அல்லது Jardin des plantes de Paris (பிரெஞ்சு மொழி: [ʒaʁdɛ̃ dɛ plɑ̃t də paʁi])) என்பது பிரான்சு நாட்டின் பாரிசு நகரிலுள்ள தாவரவியல் பூங்கா ஆகும். இந்நாட்டின் மிக முக்கிய தாவரவியல் பூங்கா இதுவாகும். பிரான்சு அரசு அறிவித்த Jardin des plantes என்ற பெயரே தற்போதுள்ளது. இப்பூங்காவினுள், ஆவணகங்கள், நூலகங்கள், பசுமைக் குடில்கள், விலங்குகள் சாலை, பிரான்சு நாட்டின் தாவரயினங்களின் சேகரங்கள் போன்ற முக்கியத் துறைகளுக்கு, முறைப்படியான கட்டிடங்கள் பலவற்றைக் கொண்டுள்ளன. இதன் நில அளவு, 24 மார்ச்சு 1993 முதல், 28 எக்டேர் (280,000 m2) ஆகும். இத்தாவரியில் கட்டிடத்திற்கு முன்னே, 1601 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்த "Robinier Faux Acacia" மரம் இருக்கிறது. இத்தாவரவியல் காட்சியகம், 1930–35 ஆம் ஆண்டு இராக்பெல்லர் அறக்கட்டளை (Rockefeller Foundation) கொடையால் உருவாக்கப்பட்டது. இக்கட்டிடத்தின் தரைத்தளம், பொது மக்களுக்காக, குறைந்த காலத்திற்கு மட்டும் செயற்படும் கண்காட்சி தளமாகப் பயன்படுகிறது. அதாவது அவ்வப்போது இதன் 'கண்காட்சி கரு' மாறி கொண்டே இருக்கும். இங்குள்ள பிரான்சு நாட்டு உலர் தாவரகம் (Herbier National), உலகிலேயே அதிக அளவு உலர் தாவரக ஆவணங்களைப் பெற்று பராமரித்து வருகிறது. இந்த ஆவணங்களின் எண்ணிக்கை, 7.5 மில்லியன் ஆகும்.

பாரிசு: அருகிலுள்ள இடங்கள்

National Museum of Natural History, France

320 m தொலைவில்

Grand Mosque of Paris

410 m தொலைவில்

Canal Saint-Martin

630 m தொலைவில்

Panthéon

1.0 km தொலைவில்

Opéra Bastille

1.2 km தொலைவில்

Place de la Bastille

1.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.