← கம்போடியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கோ கெர்
பண்டைய நகரம்
பிற மொழிகள்: English · 日本語 · Español
விரைவான பதில்கள்
கோ கெர் என்றால் என்ன?
கோ கெர் ( Koh Ker) என்பது கம்போடியாவில் உள்ள தொலைதூர தொல்பொருள் தளமாகும்.
கோ கெர் எங்கே உள்ளது?
கம்போடியா; ஆயத்தொலைவு 13.7750, 104.5472.
இதன் கதை
கோ கெர் ( Koh Ker) என்பது கம்போடியாவில் உள்ள தொலைதூர தொல்பொருள் தளமாகும். இது வடக்கு கம்போடியாவின் சியெம் ரீப் மற்றும் அங்கோர் பழங்காலத் தளத்திலிருந்து 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. காடுகள் நிறைந்த பகுதியான இங்கு மக்கள்தொகை குறைவாகவே உள்ளது. 81 சதுர கிலோமீட்டர் (31 சதுர மைல்) பாதுகாக்கப்பட்ட பகுதியில் 180க்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்கள் காணப்பட்டன. பெரும்பாலான நினைவுச்சின்னங்கள் காட்டுக்குள் மறைந்திருப்பதாலும், முழுப் பகுதியிலும் மிதிவெடிகள் அகற்றப்படாததாலும் சுமார் பன்னிரெண்டு நினைவுச்சின்னங்களை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்வையிட முடியும். கோ கெர் என்பது கெமர் பேரரசின் முக்கியமான நகரத்தின் நவீன பெயராகும். கல்வெட்டுகளில் இந்த நகரம் 'இலிங்கபுரம்' ( இலிங்கங்களின் நகரம்) அல்லது சோக் கார்க்யார் அல்லது 'இரும்பு மரக் காடு' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நான்காம் செயவர்மன், இரண்டாம் ஹர்ஷவர்மன் ஆகிய கோ கெர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் சிலகாலம் முழு பேரரசின் தலைநகராக இருந்தது ( பொ.ச. 928 – 944 ). செயவர்மன் ஒரு லட்சிய கட்டிடத் திட்டத்தை செயல்படுத்தினார். அவரது ஆட்சியில் ஒரு பெரிய தண்ணீர் குளமும், சுமார் நாற்பது கோவில்களும் கட்டப்பட்டன. மிக முக்கியமான கோவில் வளாகம்‑ சிக்கலான, ஒரு இரட்டை சரணாலயம் (பிரசாத் தோம் / பிராங்), இது ஒரு நேர்கோட்டுத் திட்டத்தைப் பின்பற்றுகிறது.
கம்போடியா: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.