Landmark Wiki

← இலாகூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இலாகூர் கோட்டை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இலாகூர் கோட்டை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இலாகூர் கோட்டை என்றால் என்ன?

இலாகூர் கோட்டை (Lahore Fort) உள்ளூரில் சாஹி கிலா (Shahi Qila, உருது/Punjabi: شاہی قلعہ), பாக்கித்தானின் பஞ்சாபிலுள்ள லாகூர் நகரில் உள்ள கோட்டை ஆகும்.

இலாகூர் கோட்டை எங்கே உள்ளது?

இலாகூர்; ஆயத்தொலைவு 31.5878, 74.3150.

இதன் கதை

இலாகூர் கோட்டை (Lahore Fort) உள்ளூரில் சாஹி கிலா (Shahi Qila, உருது/Punjabi: شاہی قلعہ), பாக்கித்தானின் பஞ்சாபிலுள்ள லாகூர் நகரில் உள்ள கோட்டை ஆகும். அரண் சூழ் இலாகூர் நகரின் வடமேற்கே இக்பால் பூங்காவில் அமைந்துள்ளது. பாக்கித்தானிலேயே மிகப்பெரும் நகரியப் பகுதிப் பூங்காவாக விளங்கும் இக்பால் பூங்கா, 20 எக்டேர் பரப்பளவில் சரிவக வடிவில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டையின் அடித்தளங்கள் மிகத் தொன்மையானவையாக இருந்தாலும் தற்போது காணப்படும் கோட்டை பெரும்பாலும் முகலாயப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1556–1605 காலகட்டத்தில் அக்பர் ஆட்சியில் பெரிதும் கட்டமைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த முகலாயப் பேரரசர்கள் இங்கிருந்து ஆண்டு வந்தனர். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சீக்கிய, பிரித்தானிய ஆட்சியாளர்களின்பாற் சென்றது. இந்தக் கோட்டைக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. ஔரங்கசீப் கட்டிய வாயில் ஆலம்கிரி வாயில் என்று அழைக்கப்படுகின்றது. இந்த வாயில் பாத்ஷாஹி பள்ளிவாசல் நோக்கி அமைந்துள்ளது. அக்பர் கட்டிய பழைய வாயில் மசீட்டி அல்லது மசூதி வாயில் எனப்படுகின்றது. இது அரண் சூழ் நகரின் மசீட்டி நோக்கி உள்ளது. தற்போது ஆலம்கிரி வாயில் முதன்மை வாயிலாகப் பயன்படுத்தப்படுகின்றது; மசீட்டி வாயில் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. முகலாயக் கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக இந்தக் கோட்டை விளங்குகின்றது.

இலாகூர்: அருகிலுள்ள இடங்கள்

Moti Masjid (Lahore Fort)

140 m தொலைவில்

Begum Shahi Mosque

280 m தொலைவில்

Naulakha Pavilion

290 m தொலைவில்

Sheesh Mahal (Lahore Fort)

290 m தொலைவில்

Roshnai Gate

290 m தொலைவில்

Hazuri Bagh

320 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.