← பிலடெல்பியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
விடுதலை மணி
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
விடுதலை மணி என்றால் என்ன?
விடுதலை மணி (Liberty Bell) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையின் உருவகச் சின்னமாக பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா நகரில் அமைந்துள்ளது.
விடுதலை மணி எங்கே உள்ளது?
பிலடெல்பியா; ஆயத்தொலைவு 39.9494, -75.1503.
இதன் கதை
விடுதலை மணி (Liberty Bell) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையின் உருவகச் சின்னமாக பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா நகரில் அமைந்துள்ளது. பென்சில்வேனியா மாநில மாளிகையில் வைக்கப்பட்டிருந்த இந்த மணி, தற்போது பென்சில்வேனியா தேசிய வரலாற்றுப் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மணி இலண்டன் லெசுட்டர், பாக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, "அனைத்து நிலங்களிலும் அதன் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விடுதலையை அறிவிக்கவும்" (லேவியராகமம் புத்தகத்திலிருந்து ஒரு விவிலியக் குறிப்பு 25:10) என்ற வரிகள் பொறிக்கப்பட்டு 1752 ஆம் ஆண்டில் பென்சில்வேனிய மாகாண சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. பிலடெல்பியாவுக்கு வந்தபின் மணி முதலில் ஒலித்த பின்னர் வெடிப்புகள் ஏற்பட்டன. உள்ளூர் தொழிலாளர்களான ஜான் பாஸ் மற்றும் ஜான் ஸ்டோ ஆகியோரால் இரண்டு முறை மறுசீரமைக்கப்பட்டது. இவர்களின் கடைசிப் பெயரக்ள் மணியில் பொறிக்கப்பட்டுள்ளன. மணியில் ஆரம்ப ஆண்டுகளில், சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்ற அமர்வுகளுக்கு வரவழைக்கவும், பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரகடனங்கள் குறித்து குடிமக்களை எச்சரிக்கவும் இந்த மணி பயன்படுத்தப்பட்டது.
பிலடெல்பியா: அருகிலுள்ள இடங்கள்
Independence Hall
70 m தொலைவில்
Second Bank of the United States
190 m தொலைவில்
Independence National Historical Park
260 m தொலைவில்
Carpenters' Hall
300 m தொலைவில்
National Constitution Center
470 m தொலைவில்
Philadelphia Mint
520 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.