← இலுவோயங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லுங்மென் கற்குகை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
லுங்மென் கற்குகை என்றால் என்ன?
லுங்மன் கற்குகை (Longmen Grottoes, எளிய சீனம்: 龙门石窟; மரபுவழிச் சீனம்: 龍門石窟; பின்யின்: lóngmén shíkū) என்பது மத்திய சீனாவின் ஹொனான் மாநிலத்தின் புராதன நகரான லொயாங் நகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பண்பாட்டு முக்கியத்துவம் மிகுந்த இடமாகும்.
லுங்மென் கற்குகை எங்கே உள்ளது?
இலுவோயங்; ஆயத்தொலைவு 34.5556, 112.4697.
இதன் கதை
லுங்மன் கற்குகை (Longmen Grottoes, எளிய சீனம்: 龙门石窟; மரபுவழிச் சீனம்: 龍門石窟; பின்யின்: lóngmén shíkū) என்பது மத்திய சீனாவின் ஹொனான் மாநிலத்தின் புராதன நகரான லொயாங் நகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பண்பாட்டு முக்கியத்துவம் மிகுந்த இடமாகும். லுங்மன் பள்ளத்தாக்கின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கிடையிலும் போக்குவரத்தின் முக்கிய இடமாக இது திகழ்கிறது. இவ்விடத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நேரெதிர் நிலையில் மலைகள் உள்ளன. நடுவில் ஈஹொ ஆறு ஓடுகின்றது. எழில் மிகுந்த இயற்கைக் காட்சித் தலமான இவ்விடத்தின் காலநிலை மக்களுக்கு ஏற்றதாக இருப்பதனால் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறாது. லுங்மன் கற்குகை, கான்சு மாநிலத்தில் உள்ள தங்ஹுவாங் முகௌ கற்குகை, சாங்சிதாதொங் யுங்காங் கல்குகை ஆகிய சீனாவின் மூன்று குகைகளும் சீனாவின் கல் கலைக் களஞ்சியம் என அழைக்கப்படுகின்றன. மத்திய சீனாவின் ஹொனான் மாநிலத்தைச் சேர்ந்த லொயாங், சீனத் தேச நாகரீகத்தின் துவக்க இடங்களில் ஒன்றாகும். இந்நகரில் அமைந்துள்ள லுங்மன் கற்குகை சுமார் 1500 ஆண்டு கால வரலாறுடையது.
இலுவோயங்: அருகிலுள்ள இடங்கள்
The cemetery of Bai Juyi
1.1 km தொலைவில்
Tomb of An Bei
7.0 km தொலைவில்
Luoyang Museum
10.1 km தொலைவில்
Luoyang Ancient Tombs Museum
20.6 km தொலைவில்
White Horse Temple
22.2 km தொலைவில்
Yongning Pagoda
22.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.