← அபுதாபி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லூவ்வர் அபுதாபி
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
லூவ்வர் அபுதாபி என்றால் என்ன?
லூவ்வர் அபுதாபி ( Louvre Abu Dhabi ) என்பது ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபியில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் நாகரிக அருங்காட்சியகம் ஆகும்.
லூவ்வர் அபுதாபி எங்கே உள்ளது?
அபுதாபி; ஆயத்தொலைவு 24.5330, 54.4000.
இதன் கதை
லூவ்வர் அபுதாபி ( Louvre Abu Dhabi ) என்பது ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபியில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் நாகரிக அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் 2017 நவம்பர் 8 அன்று நிறுவப்பட்டது. இது அபுதாபி நகரம் மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு இடையிலான முப்பது ஆண்டுகால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அருங்காட்சியகம் சாதிய்யாத் தீவு கலாச்சார மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஏறக்குறைய 24,000 சதுர மீட்டர் (260,000 சதுர அடி) அளவு கொண்டது, அதில் 8,000 சதுர மீட்டர் (86,000 சதுர அடி) காட்சியகங்களைக் கொண்டுள்ளது. , இது அரேபிய தீபகற்பத்தில் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம் ஆகும். கட்டுமானத்தின் இறுதிச் செலவு 600 மில்லியன் யூரோ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. . கூடுதலாக, லூவ்வர் என்ற பெயருடனான கூட்டுக்காக, அபுதாபியால் 525 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. மேலும் கலைப் பொருள் கடன்கள், சிறப்பு கண்காட்சிகள் மற்றும் நிர்வாக ஆலோசனைகள் போன்ற பரிமாற்றங்களுக்காக கூடுதலாக $ 747 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கத்திய கலைகளுக்கு இடையிலான இடைவெளியை நிரப்புவதில் கவனம் செலுத்தப்பட்டு உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட கலைப்படைப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
அபுதாபி: அருகிலுள்ள இடங்கள்
Abrahamic Family House
660 m தொலைவில்
Imam Al-Tayeb Mosque
660 m தொலைவில்
Guggenheim Abu Dhabi
730 m தொலைவில்
Zayed National Museum
1.9 km தொலைவில்
Abu Dhabi Investment Authority Tower
7.2 km தொலைவில்
Qasr Al Hosn
7.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.