Landmark Wiki

← நேபாளம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

லும்பினி

நேபாளத்தின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள புத்த மதப் புனித யாத்திரைத் தலம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

லும்பினி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

லும்பினி என்றால் என்ன?

லும்பினி,(நேபாளி மொழி & சமஸ்கிருதம் लुम्बिनी ,பொருள்:"விரும்பத்தகுந்த") நேபாள நாட்டின் லும்பினி மாநிலம், ரூபந்தேஹி மாவட்டத்தில் உள்ள பௌத்த புனிதயாத்திரைத் தலமாகும்.

லும்பினி எங்கே உள்ளது?

நேபாளம்; ஆயத்தொலைவு 27.4814, 83.2758.

இதன் கதை

லும்பினி,(நேபாளி மொழி & சமஸ்கிருதம் लुम्बिनी ,பொருள்:"விரும்பத்தகுந்த") நேபாள நாட்டின் லும்பினி மாநிலம், ரூபந்தேஹி மாவட்டத்தில் உள்ள பௌத்த புனிதயாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, சித்தார்த்தன் எனும் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் ஐந்து புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய நான்கு குசிநகர், புத்த காயா, வைசாலி மற்றும் சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லும்பினியில் மாயாதேவி கோயில் உள்ளிட்ட பல கோயில்களும், புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இந்த ஏரியில் கௌதம புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயா தேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனையின் இடிபாடுகளையும் காணமுடியும். லும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

நேபாளம்: அருகிலுள்ள இடங்கள்

சித்வான் தேசியப் பூங்கா

104.3 km தொலைவில்

சாகர்மாதா தேசியப் பூங்கா

344.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.