Landmark Wiki

← சிகாகோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மில்லெனியம் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español

மில்லெனியம் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மில்லெனியம் பூங்கா என்றால் என்ன?

மில்லெனியம் பூங்கா (Millenium Park) அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்துள்ள ஒரு பொது பூங்காவாகும்.

மில்லெனியம் பூங்கா எங்கே உள்ளது?

சிகாகோ; ஆயத்தொலைவு 41.8825, -87.6225.

இதன் கதை

மில்லெனியம் பூங்கா (Millenium Park) அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்துள்ள ஒரு பொது பூங்காவாகும். பொதுமக்கள் கூடுமிடமான இப்பூங்கா சிகாகோவின் மிச்சிகன் ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னதாக தொடருந்து நிறுத்துமிடமாக இருந்தது. மிச்சிகன் அவன்யு, ரான்டொல்ப் தெரு, கொலம்பஸ் டிரைவ் மற்றும் ஈஸ்ட் மன்ரோ டிரைவ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு தரவுகளின் படி சிகாகோவில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் மில்லெனியம் பூங்கா கடற்படை தூண்சுவர்களுக்கு அடுத்த இடம் பெற்றிருந்தது. இப்பூங்காவின கட்டுவதற்கான திட்டங்கள் அக்டோபர் 1997ஆம் ஆண்டில் தொடங்கின. கட்டடப்பணிகள் 1998ஆம் ஆண்டு தொடங்கி, நான்கு ஆண்டுகள் தொய்விற்குப் பின் 2004ஆம் ஆண்டு முடிந்தன. இப்பூங்கா ஜூலை 16, 2004 ஆம் நாள் திறக்கப்பட்டது. மூன்று நாள் திறப்பு விழா சுமார் மூன்று இலட்சம் மக்களை ஈர்த்தது. இப்பூங்கா தனது பொதுச் சேவைக்காகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் படியான வடிவமைப்பிற்காகவும் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. இப்பூங்காவில் நுழைய கட்டணம் வசூலிக்க்ப்படுவதில்லை. ஜே பிரித்கேர் பெவிலியன், க்லூது கேட்,மற்றும் கிறவுன் பௌண்டைன், லூரி கார்டன் மற்றும் பல பகுதிகள் மக்களைக் கவர்கின்றன. இப்பூஙகாவிலிருந்து பி.பீ நடைபாலம் மற்றும் நிகோலஸ் பாலவழியின் மூலம் கிரான்ட் பூங்காவின் மற்ற பகுதிகளை அணுகலாம்.

சிகாகோ: அருகிலுள்ள இடங்கள்

Cloud Gate

70 m தொலைவில்

Jay Pritzker Pavilion

80 m தொலைவில்

Chicago Theatre

540 m தொலைவில்

Chase Tower

640 m தொலைவில்

Grant Thornton Tower

720 m தொலைவில்

Auditorium Building

750 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.