Landmark Wiki

← இசுபகான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இமாம் சதுக்கம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இமாம் சதுக்கம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இமாம் சதுக்கம் என்றால் என்ன?

இமாம் சதுக்கம் (Imam Square) அல்லது நகசு சகான் சதுக்கம் (Naqsh-e Jahan Square; பாரசீகம்: میدان نقش جهان; மைதானே நகசு சகான்; பொருள்: "உலக சதுக்கத்தின் உருவம்"; முன்னைய பெயர் சா சதுக்கம் [Shah Square]), என்பது ஈரானின் இசபகான் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள சதுக்கம் ஆகும்.

இமாம் சதுக்கம் எங்கே உள்ளது?

இசுபகான்; ஆயத்தொலைவு 32.6575, 51.6778.

இதன் கதை

இமாம் சதுக்கம் (Imam Square) அல்லது நகசு சகான் சதுக்கம் (Naqsh-e Jahan Square; பாரசீகம்: میدان نقش جهان; மைதானே நகசு சகான்; பொருள்: "உலக சதுக்கத்தின் உருவம்"; முன்னைய பெயர் சா சதுக்கம் [Shah Square]), என்பது ஈரானின் இசபகான் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள சதுக்கம் ஆகும். 1598 இற்கும் 1629 இற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இது முக்கியமானதொரு வரலாற்றுப் பகுதியும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களமும் ஆகும். இது 160 மீட்டர்கள் (520 அடி) அகலமும் 560 மீட்டர்கள் (1,840 அடி) நீளமும் உடையது (89,600 சதுர மீட்டர்கள் (964,000 sq ft) பரப்பு). சா பள்ளிவாசல் சதுக்கத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அதன் மேற்குப் பகுதியில் அலி கபு அரண்மனை உள்ளது. சதுக்கத்தின் கிழக்குப் பக்கத்தில் செய்க் லொட்ப் அல்லா பள்ளிவாசலும், வடக்குப் பக்கத்தில் பெரிய அங்காடிக்கான கெய்சாரியா வாயிலும் உள்ளது. தற்போது சா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைத் தொழுகை இடம்பெறுகிறது. இச்சதுக்கம் ஈரானிய 20,000 றியால் நாணயத்தின் பின் பக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இசுபகான்: அருகிலுள்ள இடங்கள்

Ali Qapu

110 m தொலைவில்

Sheikh Lotfollah Mosque

110 m தொலைவில்

Shah Mosque

340 m தொலைவில்

Jarchi Mosque

420 m தொலைவில்

Chehel Sotoun

520 m தொலைவில்

Grand Bazaar

660 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.