Landmark Wiki

← சியோல்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கொரிய தேசிய அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

கொரிய தேசிய அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கொரிய தேசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?

கொரியா தேசிய அருங்காட்சியகம் (National Museum of Korea) தலைமை அருங்காட்சியகமாக உள்ளது.

கொரிய தேசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

சியோல்; ஆயத்தொலைவு 37.5239, 126.9803.

இதன் கதை

கொரியா தேசிய அருங்காட்சியகம் (National Museum of Korea) தலைமை அருங்காட்சியகமாக உள்ளது. இந்த அருங்காட்சியகம் 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து தென் கொரியாவின் வரலாறு மற்றும் கலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கலாச்சார அமைப்பா உள்ளது. இந்த அருங்காட்சியகம் தொல்பொருள், வரலாறு மற்றும் கலை ஆகிய துறைகளில் பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது, தொடர்ந்து பல்வேறு கண்காட்சிகள் மற்றும் கல்வித் திட்டங்களை உருவாக்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில், யோங்சன் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து, இந்த அருங்காட்சியகம் 20 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது, வேறுவிதமாகக் கூறினால், ஆண்டுதோறும் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது, இது உலகிலும் ஆசியாவிலும் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். தென்கொரியாவைப் பொறுத்தவரை இதுவே மிக அதிமாகப் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமாகும். சியோல் பெருநகர அரசாங்கத்தால் 2011 நவம்பரில் கிட்டத்தட்ட 2,000 வெளிநாட்டு பார்வையாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், சியோலில் தங்களுக்கு பிடித்த நடவடிக்கைகளில் இந்த அருங்காட்சிகத்தைப் பார்வையிடுவது ஒன்றாகும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

சியோல்: அருகிலுள்ள இடங்கள்

War Memorial of Korea

1.4 km தொலைவில்

Banpo Bridge

1.7 km தொலைவில்

Seoul Central Mosque

1.8 km தொலைவில்

Seoul National Cemetery

2.9 km தொலைவில்

Namsan

3.0 km தொலைவில்

Namsan Seoul Tower

3.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.