← எடின்பரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?
இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம், இசுக்காட்லாந்தின், எடின்பரோ நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம்.
இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
எடின்பரோ; ஆயத்தொலைவு 55.9469, -3.1900.
இதன் கதை
இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம், இசுக்காட்லாந்தின், எடின்பரோ நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம். இதற்கு முன்னோடியாக இருந்த "தேசிய அருங்காட்சியகங்கள் இசுக்காட்லாந்து" என்னும் அமைப்பு 1985 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டமூலம் ஒன்றின் வழி உருவாக்கப்பட்டது. அக்காலத்தில் இருந்த இசுக்காட்லாந்து தேசிய பழம்பொருள் அருங்காட்சியகம், அரச இசுக்காட்டிய அருங்காட்சியகம் என்னும் இரண்டையும் இணைத்து இதை உருவாக்கினர். 2006 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகத்துடன், பழம்பொருட்கள், பண்பாடு, வரலாறு ஆகியவற்றுடன் தொடர்புடைய சேகரிப்புக்களைக் கொண்டிருந்த இசுக்காட்லாந்து அருங்காட்சியகத்தையும், அறிவியல், தொழினுட்பம், இயற்கை வரலாறு, உலக வரலாறு ஆகியவற்றோடு தொடர்புடைய சேகரிப்புக்களுடன் கூடிய அரச அருங்காட்சியகத்தையும் இணைத்ததன் மூலம் "இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம்" உருவாகியது. இதைப் பார்ப்பதற்குக் கட்டணம் அறவிடப்படுவது இல்லை. இந்த அருங்காட்சியகம் சேம்பர்சு சாலையில் அருகருகே அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் அமைந்துள்ளது. இரண்டு கட்டிடங்களும் தனித்துவமான பாணிகளில் அமைந்தவை. ஒன்று இசுக்காட்லாந்து அருங்காட்சியகக் கட்டிடம். இது 1998 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்ட நவீன பாணியில் அமைந்த கட்டிடம்.
எடின்பரோ: அருகிலுள்ள இடங்கள்
Greyfriars Kirkyard
140 m தொலைவில்
St Giles' Cathedral
280 m தொலைவில்
Edinburgh Central Mosque
320 m தொலைவில்
Grassmarket
390 m தொலைவில்
Scottish National Gallery
550 m தொலைவில்
Balmoral Hotel
640 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.