Landmark Wiki

← ஒசுலோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

நோபல் அமைதி மையம்

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Español

நோபல் அமைதி மையம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

நோபல் அமைதி மையம் என்றால் என்ன?

நோபல் அமைதி மையம் (Nobel Peace Center, நோர்வே: Nobels Fredssenter) நோர்வேயின் ஒஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் அதன் உன்னதக் கொள்கைகளை வெளிப்படுத்த அமைக்கப்பட்ட காட்சியகம் ஆகும்.

நோபல் அமைதி மையம் எங்கே உள்ளது?

ஒசுலோ; ஆயத்தொலைவு 59.9115, 10.7305.

இதன் கதை

நோபல் அமைதி மையம் (Nobel Peace Center, நோர்வே: Nobels Fredssenter) நோர்வேயின் ஒஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் அதன் உன்னதக் கொள்கைகளை வெளிப்படுத்த அமைக்கப்பட்ட காட்சியகம் ஆகும். இந்த மையம் போர், அமைதி, பிணக்குத் தீர்வு குறித்து பண்பாடும் அரசியலும் கலந்த ஈடுபாடு, உரையாடல் மற்றும் நினைப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் அரங்கமாகவும் விளங்குகிறது. இந்த மையம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களையும் அவர்களது பணிகளையும் காட்சிப்படுத்துவதோடு ஆல்பிரட் நோபல்லின் வரலாற்றையும் மற்ற நோபல் பரிசுகளைக் குறித்த குறிப்புகளையும் வழங்குகிறது. இதற்காக பல்லூடக ஊடாடும் தொழினுட்பம், கண்காட்சிகள், சந்திப்புகள், விவாதங்கள், நாடகங்கள், கச்சேரிகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன; வழமையான வழிகாட்டப்பட்ட சுற்றுலாவும் கல்வித் திட்டங்களும் கூடுதலாக உள்ளன. நோபல் அமைதி மையம் நோபல் பவுண்டேசன் குழுமத்தின் ஓர் நிறுவனமாகும். இது பன்னாட்டு நிர்வாகத்தையும் நோபல் பரிசு வழங்கும் விழாவையும் ஒருங்கிணைக்கிறது. பென்டே எரிக்சன் நோபல் அமைதி மையத்தின் தற்போதைய இயக்குநராவார். நோபல் அமைதி மையத்தை சீர்மிகு அரசர் நோர்வேயின் ஐந்தாம் ஹரால்டு 2005இல் துவக்கி வைத்தார். துவக்க விழாவிற்கு நோர்வே மற்றும் சுவீடனின் அரச குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். இதுவரை (1 அக்டோபர் 2009 வரை) 400,000 வருகையாளர்கள் வந்துள்ளனர்.

ஒசுலோ: அருகிலுள்ள இடங்கள்

National Museum of Norway

80 m தொலைவில்

Rådhusplassen

130 m தொலைவில்

National Theatre

390 m தொலைவில்

Norway's Resistance Museum

500 m தொலைவில்

Grand Hotel

570 m தொலைவில்

Akershus Fortress

620 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.