Landmark Wiki

← மஸ்கத்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஓமன் குழந்தைகள் அருங்காட்சியகம்

ஓமான் நாட்டில் உள்ள குழந்தைகள் அறிவியல் அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஓமன் குழந்தைகள் அருங்காட்சியகம் என்றால் என்ன?

ஓமன் குழந்தைகள் அருங்காட்சியகம் (Oman Children's Museum) என்பது ஒரு குழந்தைகள் அறிவியல் அருங்காட்சியகமாகும்.

ஓமன் குழந்தைகள் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

மஸ்கத்; ஆயத்தொலைவு 23.6159, 58.4808.

இதன் கதை

ஓமன் குழந்தைகள் அருங்காட்சியகம் (Oman Children's Museum) என்பது ஒரு குழந்தைகள் அறிவியல் அருங்காட்சியகமாகும். ஓமான் நாட்டின் மசுகட்டில் குரம் இயற்கை பூங்காவிற்கு அருகே சுல்தான் கபூசு தெருவில் வெள்ளை குவிமாடம் கொண்ட கட்டிடத்தில் அமைந்துள்ளது. அருங்காட்சியகம் ஓமான் நாட்டின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று ஓமானில் 20 ஆவது தேசிய தின கொண்டாட்டத்தில் சுல்தான் கபூசு பின் சைத் அல் சையினால் திறக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் 45 கண்காட்சிகள் மற்றும் இரண்டு விளக்கக் காட்சிகள் உள்ளன. அருங்காட்சியகம் 10,000 சதுர அடிகள் (930 m2) பரப்பளவு கொண்டுள்ளது. . ஓமானின் முதல் அறிவியல் அருங்காட்சியகமான இங்கு ஆண்டுதோறும் சுமார் 50,000 பார்வையாளர்கள் வந்து பார்வையிடுகின்றனர். அருங்காட்சியகம் தற்போது முன்னாள் பள்ளி ஆசிரியரான சமிரா அகமத் அல் ரைசி என்பவரால் நடத்தப்படுகிறது, இவர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இந்த குழந்தைகள் அருங்காட்சியகம் மனித வாழ்வின் அறிவியல் முறைகளை எடுத்துரைக்கிறது. கண்காட்சி பகுதி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது; மனித வாழ்க்கை, இயற்பியல் மற்றும் அவதானிப்பு என்பவை அம்மூன்று பகுதிகளாகும். இது காலங்காலமாக அறிவியலின் முன்னேற்றத்தை ஆராய்கிறது.

மஸ்கத்: அருகிலுள்ள இடங்கள்

Qurm Nature Reserve

460 m தொலைவில்

Royal Opera House Muscat

1.2 km தொலைவில்

Museum of Omani Heritage

1.2 km தொலைவில்

Oman Oil and Gas Exhibition Centre

3.0 km தொலைவில்

Sts. Peter and Paul Church

5.7 km தொலைவில்

Naseem Garden

6.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.