← பனாமா நகரம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பனாமா கால்வாய்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பனாமா கால்வாய் என்றால் என்ன?
பனாமா கால்வாய் (எசுப்பானியம்: Canal de Panamá) என்பது பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும்.
பனாமா கால்வாய் எங்கே உள்ளது?
பனாமா நகரம்; ஆயத்தொலைவு 9.1200, -79.7500.
இதன் கதை
பனாமா கால்வாய் (எசுப்பானியம்: Canal de Panamá) என்பது பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது 80 கி.மீ. நீளமுள்ள நீர்வழி ஆகும். இது பனாமாவின் இஸ்தமுவில் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது மேலும் இக்கால்வாய் சர்வதேச கடல்வழி வர்த்தகத்திற்கான முக்கிய வழியாக உள்ளது. இக்கால்வாயில் இருந்து கப்பல்கள் காட்ன் ஏரியை அடையும்வரை கால்வாயின் ஒவ்வொரு முனையிலும் நீரை அடைத்து நீர்மட்டத்தைக் கூட்ட, குறைக்க கதவணை அமைப்புகள் உள்ளன, கால்வாயை கடல் மட்டத்தின் ஆழத்துக்கு மிக ஆழமாக அகழுவதைத் தவிர்க்கும்விதமாக கடல் மட்டத்திற்கு 26 மீட்டர் (85 அடி) உயரத்திற்கு மேலே ஒரு செயற்கை ஏரி அமைக்கப்பட்டுள்ளது, இதில் உள்ள கதவணைகள் 33.5 மீட்டர் (110 அடி) அகலம் கொண்டவையாக உள்ளன. மூன்றாவது அகன்ற நீர்பாதையானது அகன்ற கதவணைகளுடன் செப்டம்பர் 2007 மற்றும் மே 2016வுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டது. விரிவாக்கப்பட்ட கால்வாயில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி வணிக நடவடிக்கையைத் தொடங்கியது. புதிய பெரிய கதவணைகளை அமைத்ததற்குப், பிந்தைய பனாமா கால்வாயில் பெரிய கப்பல்களின் போக்குவரத்தை அனுமதிக்க ஏற்றதாகவும், மேலும் மிகுதியான சரக்குகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டதாகவும் ஆனது.
பனாமா நகரம்: அருகிலுள்ள இடங்கள்
Miraflores (Panama)
22.1 km தொலைவில்
Panama City Panama Temple
24.4 km தொலைவில்
Bridge of the Americas
28.3 km தொலைவில்
Ancon Hill
28.5 km தொலைவில்
Panama Museum of Contemporary Art
28.8 km தொலைவில்
Jama Mosque
29.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.