← ஏதென்ஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பார்த்தினன்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பார்த்தினன் என்றால் என்ன?
பார்த்தினன் (Parthenon) என்பது கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோட்டையில் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால கிரேக்க கோயிலாகும்.
பார்த்தினன் எங்கே உள்ளது?
ஏதென்ஸ்; ஆயத்தொலைவு 37.9715, 23.7266.
இதன் கதை
பார்த்தினன் (Parthenon) என்பது கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோட்டையில் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால கிரேக்க கோயிலாகும். கிரீசு நாட்டில் எஞ்சியுள்ள கட்டிடங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் பார்த்தினன் கோயில் ஆகும். உலகம் போற்றும் இப்பழைய கோயில் கட்டிடம் 2500 ஆண்டுகளாக அங்கு நின்று கொண்டிருக்கிறது. ஏதெனியப் பேரரசின் ஆட்சி உச்சகட்டத்தில் இருந்த கி.மு 447 ஆம் ஆண்டு இக்கட்டிடத்தின் கட்டுமாணமப் பணி தொடங்கியது. கி.மு. 438 இல் கோயில் கட்டி முடிக்கப்பட்டாலும் கி.மு.432 வரை கோயிலை அலங்கரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பொதுவாக இக்கோயில் கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகளுள் ஒன்றான டோரிக் ஒழுங்கின் உச்சநிலையாக கருதப்படுகிறது. கோயிலுள்ள அலங்கார சிற்பங்கள் கிரேக்க கலையின் உச்சப்புள்ளிகளாகக் கருதப்படுகின்றன. பண்டைய கிரேக்கம், ஏதெனியக் குடியரசு மற்றும் மேற்கத்திய நாகரிகம் ஆகியனவற்றுக்கான ஒரு நிலையான அடையாளச் சின்னமாகவும் , உலகின் மிகச்சிறந்த கலாச்சார நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் பார்த்தினன் கோயில் கருதப்படுகிறது.
ஏதென்ஸ்: அருகிலுள்ள இடங்கள்
Athena Parthenos
30 m தொலைவில்
ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்
50 m தொலைவில்
Erechtheion
70 m தொலைவில்
Athena Promachos
70 m தொலைவில்
Temple of Athena Nike
150 m தொலைவில்
Theatre of Dionysus
170 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.