Landmark Wiki

← ஆக்சுபோர்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிட் ரிவர்ஸ் மியூசியம்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

பிட் ரிவர்ஸ் மியூசியம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிட் ரிவர்ஸ் மியூசியம் என்றால் என்ன?

பிட் ரிவர்ஸ் மியூசியம் (Pitt Rivers Museum) என்பது ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பழமையான அருங்காட்சியகம் ஆகும்.

பிட் ரிவர்ஸ் மியூசியம் எங்கே உள்ளது?

ஆக்சுபோர்டு; ஆயத்தொலைவு 51.7586, -1.2550.

இதன் கதை

பிட் ரிவர்ஸ் மியூசியம் (Pitt Rivers Museum) என்பது ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பழமையான அருங்காட்சியகம் ஆகும். இங்கு தொல் பொருள்கள், மாந்தவியல் வரலாற்றுப் பொருள்கள் முதலியவற்றைக் காட்சிப் படுத்தியுள்ளார்கள். ஆக்சுபோர்டு பல்கலைக் கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கிழக்கில் பிட் ரிவர்ஸ் மியூசியம் அமைந்துள்ளது. லெப்டினென்ட் ஜெனரல் ஆகஸ்டஸ் பிட் ரிவர்ஸ் என்பவரால் இந்த அருங்காட்சியகம் 1884 இல் தோற்றுவிக்கப் பட்டது. மாந்தவியல் கற்பிக்கும் ஓர் ஆசிரியர் தனியாக அமர்த்தியாக வேண்டும் என்ற நிபந்தனையோடு அவர் திரட்டிய பழமையான அரிய பொருள்களை ஆகஸ்டீஸ் பிட் ரிவர்ஸ் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்துக்கு வழங்கினார். இந்த அருங்காட்சியகத்தின் காப்பாளராக என்றி பல்போர் என்பவர் இருந்தார். இரண்டாவது நிபந்தனை திரட்டிய பொருள்களை வைப்பதற்கு தனியாக ஒரு கட்டடம் உருவாக்க வேண்டும் என்பது. அவ்வாறே 1885 இல் கட்டடப் பணிகள் தொடங்கி 1886 இல் அருங்காட்சிக்கான புதிய கட்டடம் உருவானது. தொடக்கக் காலத்தில் 22000 அரிய பொருள்கள் இருந்தன. அறிஞர்கள், கல்வியாளர்கள், பயணிகள் முதலானோர் தொடர்ந்து திரட்டியவற்றைக் கொடையாக வழங்கியதால் இப்பொழுது 500000 பொருள்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆக்சுபோர்டு: அருகிலுள்ள இடங்கள்

Oxford University Museum of Natural History

50 m தொலைவில்

Lamb & Flag

330 m தொலைவில்

The Eagle and Child

400 m தொலைவில்

Holywell Music Room

400 m தொலைவில்

Clarendon Building

450 m தொலைவில்

Bridge of Sighs

470 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.