← பகுரைன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கல்ஆ அல்-பகுறைன்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கல்ஆ அல்-பகுறைன் என்றால் என்ன?
கல்ஆ அல்-பகுறைன் (Qal'at al-Bahrain, அரபி: قلعة البحرين), அல்லது பகுறைன் கோட்டை (Fort of Bahrain) மற்றும் முன்னதாகப் போர்த்துக்கல் கோட்டை (Qal'at al Portugal) என்றழைக்கப்படும் இத்தொல்லியல் இடம் அராபியத் தீபகற்பத்தில் பகுறைன் நாட்டில் அமைந்துள்ளது.
கல்ஆ அல்-பகுறைன் எங்கே உள்ளது?
பகுரைன்; ஆயத்தொலைவு 26.2336, 50.5206.
இதன் கதை
கல்ஆ அல்-பகுறைன் (Qal'at al-Bahrain, அரபி: قلعة البحرين), அல்லது பகுறைன் கோட்டை (Fort of Bahrain) மற்றும் முன்னதாகப் போர்த்துக்கல் கோட்டை (Qal'at al Portugal) என்றழைக்கப்படும் இத்தொல்லியல் இடம் அராபியத் தீபகற்பத்தில் பகுறைன் நாட்டில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு முதல் இங்கு நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் 12 m (39 அடி) உயரத்திற்குச் செயற்கையாக அமைக்கப்பட்ட மண்மேட்டில் பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த மண்மேடு கி.மு. 2300 இலிருந்து 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு ஆட்சியாளர்களால் பல அடுக்குகளில் வலிதாக்கப்பட்டுள்ளது. காசைட்டுக்கள், போர்த்துக்கேயர் மற்றும் ஈரானியர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். ஒரு காலத்தில் தில்முன் நாகரிகத்தின் தலைநகராகவும் இருந்துள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இந்த இடத்தை 2005 இல் உலக மரபிடமாக அறிவித்துள்ளது.
பகுரைன்: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.