Landmark Wiki

← கித்தோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கித்தோ

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கித்தோ
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கித்தோ என்றால் என்ன?

கித்தோ (எசுப்பானிய ஒலிப்பு: [ˈkito]), முறையாக சான் பிரான்ஸிஸ்கோ டி கியூடோ எக்குவடோரின் தலைநகராக இருக்கிறது.

கித்தோ எங்கே உள்ளது?

கித்தோ; ஆயத்தொலைவு -0.2200, -78.5125.

இதன் கதை

கித்தோ (எசுப்பானிய ஒலிப்பு: [ˈkito]), முறையாக சான் பிரான்ஸிஸ்கோ டி கியூடோ எக்குவடோரின் தலைநகராக இருக்கிறது. இதுவே உலகில் அதிகாரப்பூர்வமாக கடல் மட்டத்திலிருந்து 2,850 மீட்டர்கள் (9,350 அடி)அதிஉயரத்தில் உள்ள தலைநகரம் ஆகும்.. இந்த நகரம் கைல்லாபாம்பா நதியின் படுகையில், அந்தீசு மலைத்தொடரில் பி்சின்ட்சா எரிமலையின் கிழக்கு சரிவுகளில், உயிர்ப்போடுள்ள ஸ்ட்ரடோ எரிமலையின் மீது அமைந்திருக்கிறது. இந்த நகரத்தில் கடந்த 2019 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1,978,376 மக்கள்தொகை உள்ளது. கித்தோ எக்குவடோரில் குவாயேகிலுக்கு பிறகு இரண்டாவது பெரிய நகரமாகும். கடந்த 2008ம் ஆண்டில் இந்த நகரம் தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியத்தின் தலைமையகமாக நியமிக்கப்பட்டது. அமெரிக்காவின் பெரிய, சிறியளவில் மாற்றமடைந்த, சிறப்பாக பராமரிக்கப்படும் வரலாற்று மையங்களுள் கித்தோ வரலாற்று மையமும் ஒன்றாகும். 1978-இல் யுனெஸ்கோ க்ரகோவினோடு சேர்ந்து அறிவித்த முதல் உலக கலாச்சார பாரம்பரிய தளங்களுள் ஒன்றாக கித்தோவும் இருந்தன. கித்தோவின் மத்திய மையம் பூமத்தியரேகையிலிருந்து தெற்கே 25 கிலோமீட்டர்கள் (16 mi) தொலைவில் அமைந்திருக்கிறது; இந்நகரத்தின் நீட்சி பூஜ்யம் அட்சரேகையிலிருந்து 1 கிலோமீட்டர் (0.62 mi) தொலைவிற்குள் அமைந்திருக்கிறது.

கித்தோ: அருகிலுள்ள இடங்கள்

Palacio de Carondelet

30 m தொலைவில்

Plaza de la Independencia

30 m தொலைவில்

Palace of Pizarro

60 m தொலைவில்

Church of La Compañía

180 m தொலைவில்

Quito Metropolitan Cathedral

190 m தொலைவில்

Museum House of Sucre

200 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.