← கேப் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ராபன் தீவு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ராபன் தீவு என்றால் என்ன?
ராபன் தீவு (Robben Island) தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் அருகே உள்ள ஓர் தீவு.
ராபன் தீவு எங்கே உள்ளது?
கேப் டவுன்; ஆயத்தொலைவு -33.8050, 18.3700.
இதன் கதை
ராபன் தீவு (Robben Island) தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் அருகே உள்ள ஓர் தீவு. இத்தீவு நீள்வட்ட வடிவில் வடக்குத் தெற்காக 3.3 கி.மீ. நீளமும் 1.9 கி.மீ. அகலமும் கொண்டு 5.07 கி.மீ.² பரப்பளவில் அமைந்துள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து அதிக ஏற்றமிறக்கமின்றி தட்டையாக உள்ளது. நெல்சன் மண்டேலா தாம் சிறையில் கழித்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் இங்குள்ள உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த சுண்ணக்கல் சுரங்கங்களில் கட்டாயப் பணி புரிந்தனர். பணி புரிவதைவிட வேறெவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முந்தைய தென்னாபிரிக்க குடியரசுத் தலைவராகப் பொறுப்பாற்றிய கலேமா மொட்லாந்தேயும் இங்கு பத்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போதைய குடியரசுத்தலைவர் யாக்கோபு சூமாவும் இங்கு சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.
கேப் டவுன்: அருகிலுள்ள இடங்கள்
Green Point Lighthouse
11.1 km தொலைவில்
Zeitz Museum of Contemporary Art Africa
12.5 km தொலைவில்
Signal Hill
12.9 km தொலைவில்
Metlife Centre
13.4 km தொலைவில்
Nurul Islam Mosque
13.7 km தொலைவில்
Auwal Mosque
13.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.