← Salvador: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சவ்வாதோர், பாகையா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சவ்வாதோர், பாகையா என்றால் என்ன?
சவ்வாதோர் (காப்பாளர், உள்ளூர் வழக்கில் Salvador da Bahia, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [sawvaˈdoʁ (da baˈi.
சவ்வாதோர், பாகையா எங்கே உள்ளது?
Salvador; ஆயத்தொலைவு -12.9747, -38.4767.
இதன் கதை
சவ்வாதோர் (காப்பாளர், உள்ளூர் வழக்கில் Salvador da Bahia, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [sawvaˈdoʁ (da baˈi.a)] (ஐரோப்பிய போர்த்துகேயத்தில் உச்சரிப்பு: சால்வடோர் IPA: [saɫvɐˈdoɾ (ðɐ bɐˈi.ɐ)]); வரலாற்றில்: São Salvador da Bahia de Todos os Santos, தமிழில்: "அனைத்துப் புனிதர்களின் விரிகுடாவை காப்பாற்றும் புனித காப்பாளரின் நகரம்") பிரேசிலின் வடகிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமும் பாகையா மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு நடக்கும் எண்ணிக்கையில்லா வெளிப்புற விருந்துகளாலும் தெரு விழாக்களினாலும் (கார்னிவல்) சவ்வாதோர் பிரேசிலின் மனமகிழ்வுத் தலைநகரம் என்று அறியப்படுகிறது. குடியேற்றக்கால பிரேசிலின் தலைநகரமாக விளங்கிய சவ்வாதோர் அமெரிக்காக்களிலேயே மிகவும் பழைமையான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. பெரும்பான்மையான நேரங்களில் இது பாகையா, என்றே அறியப்பட்டிருந்தது; மத்திய இருபதாம் நூற்றாண்டு வரை அவ்வாறே நிலப்படங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் இதே பெயரிலுள்ள மற்ற நகரங்களிலிருந்து பிரித்துக் காட்டவே சவ்வாதோர் டா பாகையா எனப்பட்டது. பிரேசிலில் சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோவை அடுத்து மூன்றாவது மிகுந்த மக்கள் வாழும் நகரமாக சவ்வாதோர் விளங்குகிறது. 3.5 மில்லியன் மக்கள்தொகையுடன் நகரின் பெருநகர் பகுதி பிரேசிலின் கூடிய மக்கள்தொகை உடைய ஊரகப்பகுதிகளில் ஏழாவதாக உள்ளது.
Salvador: அருகிலுள்ள இடங்கள்
Historic Center of Salvador
2.7 km தொலைவில்
Church of Nossa Senhora do Rosário dos Pretos
3.4 km தொலைவில்
Church da Ordem Terceira de São Francisco
3.5 km தொலைவில்
Church and Convent of São Francisco
3.5 km தொலைவில்
Afro-Brazilian Museum
3.6 km தொலைவில்
Terreiro de Jesus
3.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.