Landmark Wiki

← உரோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புனித மரியா பேராலயம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

புனித மரியா பேராலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புனித மரியா பேராலயம் என்றால் என்ன?

புனித மரியா பேராலயம் (Basilica di Santa Maria Maggiore) என்பது உரோமையில் அமைந்துள்ள கோவில்களுள் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பழமையான ஒரு கோவில் ஆகும்.

புனித மரியா பேராலயம் எங்கே உள்ளது?

உரோம்; ஆயத்தொலைவு 41.8975, 12.4986.

இதன் கதை

புனித மரியா பேராலயம் (Basilica di Santa Maria Maggiore) என்பது உரோமையில் அமைந்துள்ள கோவில்களுள் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பழமையான ஒரு கோவில் ஆகும். இதன் முழுப்பெயர் இத்தாலிய மொழியில் Basilica Papale di Santa Maria Maggiore எனவும், இலத்தீன் மொழியில் Basilica Sanctae Mariae Majoris ad Nives எனவும் உள்ளது. இலத்தீன் பெயரில் உள்ளதுபோல, தமிழில் "பனிமய அன்னையின் கோவில்" என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. திருத்தந்தை மேலைத் திருச்சபையின் "முதுபெரும் தந்தை" (Patriarch) என்றும் அழைக்கப்பட்டதாலும், அப்பெயரோடு தொடர்புபடுத்தி மற்றும் நான்கு கோவில்கள் உரோமையில் "முதுபெரும் தந்தைக் கோவில்கள்" என்று அழைக்கப்பட்டன. அவை: புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம், புனித இலாரன்சு கோவில் என்பனவாகும். இவற்றுள் முதல் மூன்றும் "உயர் பேராலயங்கள்" (Major Basilicas) என்னும் பெயர் கொண்டுள்ளன. புனித மரியா பேராலயத்துக்கும் இச்சிறப்புப் பெயர் உண்டு. புனித மரியா கோவிலின் இன்னொரு பெயர் "லிபேரிய கோவில்" என்பதாகும். தொடக்க காலத்தில் திருத்தந்தை லிபேரியசு என்பவர் இதன் புரவலராக இருந்தார் என்னும் மரபின் அடிப்படையில் இப்பெயர் எழுந்தது. முதல் கோவில் கட்டடத்தோடு பிற்காலச் சேர்க்கைகள் நிகழ்ந்தன. 1348இல் நில நடுக்கத்தால் சேதம் ஏற்பட்டது.

உரோம்: அருகிலுள்ள இடங்கள்

Esquiline Hill

270 m தொலைவில்

Viminal Hill

410 m தொலைவில்

Servian Wall

530 m தொலைவில்

புனித பேதுரு சங்கிலிக் கோவில்

610 m தொலைவில்

Domus Aurea

730 m தொலைவில்

Quirinal Hill

940 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.