← சியெம் ரீப்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தா புரோம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தா புரோம் என்றால் என்ன?
தா புரோம் (Ta Prohm, கெமர்: ប្រាសាទតាព្រហ្ម, ஒலிப்பு: பிரசாத் தாப்ரோம்) என்பது கம்போடியாவில் சியேம்ரீப் மாகாணத்தின் அங்கோர் நகரில் அமைந்துள்ள ஒரு கோவிலின் தற்போதைய பெயராகும்.
தா புரோம் எங்கே உள்ளது?
சியெம் ரீப்; ஆயத்தொலைவு 13.4350, 103.8892.
இதன் கதை
தா புரோம் (Ta Prohm, கெமர்: ប្រាសាទតាព្រហ្ម, ஒலிப்பு: பிரசாத் தாப்ரோம்) என்பது கம்போடியாவில் சியேம்ரீப் மாகாணத்தின் அங்கோர் நகரில் அமைந்துள்ள ஒரு கோவிலின் தற்போதைய பெயராகும். கெமர் மொழியில் ராஜவிகாரை என வழங்கப்பட்டு வந்த இக்கோவில் பாயோன் வடிவமைப்பில் கிபி 12ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. இது கெமர் பேரரசர் ஏழாம் செயவர்மன் காலத்தில் மகாயாண பௌத்த மடமாகவும், பல்கலைக்க்ழகமாகவும் கட்டப்பட்டது. ஏனைய அங்கோர் கோவில்களைப் போலல்லாமல், தா புரோம் கோவில் அது கண்டுபிடிக்கப்பட்ட அதே நிலையில் தற்போதும் உள்ளது. இடிபாடுகள் மற்றும் காட்டு சூழலில் வளரும் மரங்கள் இக்கோவிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. 1992 ஆம் ஆண்டில் இக்கோவில் பகுதியை யுனெசுக்கோ நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்த்தது. தா புரோம் கோவிலின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புத் தொடர்பான திட்டத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அப்சரா என அழைக்கப்படும் அங்கோர் சியெம்ரீப் நிறுவனம் ஒன்றின் கூட்டுடன் நிருவகித்து வருகிறது.
சியெம் ரீப்: அருகிலுள்ள இடங்கள்
Banteay Kdei
1.2 km தொலைவில்
Ta Keo
1.3 km தொலைவில்
Chau Say Tevoda
1.7 km தொலைவில்
Thommanon
1.8 km தொலைவில்
Srah Srang
1.9 km தொலைவில்
Prasat Kravan
2.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.