Landmark Wiki

← தோக்கியோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தோக்கியோ கோபுரம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தோக்கியோ கோபுரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தோக்கியோ கோபுரம் என்றால் என்ன?

தோக்கியோ கோபுரம் அல்லது டோக்கியோ கோபுரம் (Tokyo Tower (東京タワー, Tōkyō tawā?

தோக்கியோ கோபுரம் எங்கே உள்ளது?

தோக்கியோ; ஆயத்தொலைவு 35.6586, 139.7456.

இதன் கதை

தோக்கியோ கோபுரம் அல்லது டோக்கியோ கோபுரம் (Tokyo Tower (東京タワー, Tōkyō tawā?) என்பது சப்பானின் மினடோ மாவட்டத்தில் அமைந்துள்ள தொடர்பாடல், அவதானிப்புக் கோபுரமாகும். 332.9 மீட்டர்கள் (1,092 அடி) உயரமுள்ள இது சப்பானில் இரண்டாவது உயரமான கட்டமைப்பாகும். பாரிசு நகரத்திலுள்ள ஈபெல் கோபுரம் போன்ற பின்னல் அமைப்புக் கோபுரக் கட்டமைப்புப் பாணியில் இக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு முறைக்கமைவாக வெள்ளை, செம்மஞ்சள் நிறங்களுடன் காணப்படுகிறது. 1958 இல் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோபுரத்தின் பிரதான வருவாய் மூலமாக உல்லாசப்பயணத்துறையும் அலைக்கம்பக் குத்தகையும் உள்ளன. இது திறக்கப்பட்டதிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். அக்கோபுரத்தின் கீழாக நான்கு மாடிக் கட்டடம் அமைந்துள்ளது. அதில் நூதனசாலை, கடைகள், உணவு விடுதிகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர் இரு அவதானிப்பு மேல் தளங்களுக்குச் செல்ல முடியும். 150 மீட்டர்கள் (490 அடி) உயரத்தில் பிரதான இரண்டு மாடி வானிலை ஆய்வுக் கூடங்கள் உள்ளன. சிறியளவில் சிறப்பு வானிலை ஆய்வுக் கூடம் 249.6 மீட்டர்கள் (819 அடி) உயரத்தில் உள்ளது. அலைக்கம்பத்திற்கான உதவிக் கட்டமைப்பாகக் கோபுரம் செயற்படுகிறது.

தோக்கியோ: அருகிலுள்ள இடங்கள்

Zōjō-ji

280 m தொலைவில்

Shiba Park

350 m தொலைவில்

Toranomon Hills

990 m தொலைவில்

Hama-rikyū Gardens

1.5 km தொலைவில்

Naikaku Sōri Daijin Kantei

1.6 km தொலைவில்

Hie Shrine

1.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.