Landmark Wiki

← பிலிப்பீன்சு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

துப்பதஹா இயற்கைப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

துப்பதஹா இயற்கைப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

துப்பதஹா இயற்கைப் பூங்கா என்றால் என்ன?

துப்பதஹா பாறை இயற்கைப் பூங்கா (Tubbataha Natural Park) என்பது சுலு கடலின் நடுவில் அமைந்துள்ள பிலிப்பீன்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

துப்பதஹா இயற்கைப் பூங்கா எங்கே உள்ளது?

பிலிப்பீன்சு; ஆயத்தொலைவு 8.9533, 119.8675.

இதன் கதை

துப்பதஹா பாறை இயற்கைப் பூங்கா (Tubbataha Natural Park) என்பது சுலு கடலின் நடுவில் அமைந்துள்ள பிலிப்பீன்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது பலவான் மாகாணத்தின் தலைநகரான புவேர்ட்டோ பிரின்செசா நகரத்திலிருந்து தென்கிழக்கில் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கடல் மற்றும் பறவைகள் சரணாலயமான இது பவளத்தால் உருவான இரண்டு பெரியத் தீவுகளையும் கொண்டுள்ளது. இது மொத்தம் 97,030 எக்டேர் (239,800 ஏக்கர்; 374.6 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. மக்கள் வசிக்காத தீவுகளும், திட்டுகளும் பலவானின் ககாயன்சிலோ தீவு நகராட்சியின் ஒரு பகுதியாகும். இது பாறைகளின் வடகிழக்கில் சுமார் 130 கிலோமீட்டர் (81 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. 1993 திசம்பரில், யுனெஸ்கோ இந்தப் தேசியப் பூங்காவை உலக பாரம்பரிய களமாக அறிவித்தது. இது கடல் உயிரினங்களின் அதிக அடர்த்தி கொண்ட ஒரு பாறைத் தீவுக்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாகும். பறவைகளுக்கும், கடல் ஆமைகளுக்கு கூடு கட்டும் இடமாக வடக்கு தீவு செயல்படுகிறது. கண்கவர் 100 மீ செங்குத்தாக சுவரும், விரிவான தடாகங்களும், இரண்டு பவளத் தீவுகளும் கொண்ட இது அழகிய பவளப்பாறைக்கு இந்த தளம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. 1999ஆம் ஆண்டில், ராம்சார் சாசனம் இந்தப் பூங்காவை சர்வதேச முக்கியத்துவத்தின் ஈரநிலங்களில் ஒன்றாக பட்டியலிட்டது.

பிலிப்பீன்சு: அருகிலுள்ள இடங்கள்

Baroque Churches of the Philippines

320.3 km தொலைவில்

Mount Hamiguitan

737.7 km தொலைவில்

Rice Terraces of the Philippine Cordilleras

898.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.