Landmark Wiki

← Mérida: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஊக்சுமால்

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

ஊக்சுமால்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஊக்சுமால் என்றால் என்ன?

ஊக்சுமால் (Uxmal) என்பது, தற்போதைய மெக்சிக்கோவில் உள்ள ஒரு பழங்கால, செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த மாயர் நகரம்.

ஊக்சுமால் எங்கே உள்ளது?

Mérida; ஆயத்தொலைவு 20.3594, -89.7714.

இதன் கதை

ஊக்சுமால் (Uxmal) என்பது, தற்போதைய மெக்சிக்கோவில் உள்ள ஒரு பழங்கால, செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த மாயர் நகரம். மெக்சிக்கோவில் உள்ள பலெங்கே, சிச்சென், கலக்முல்; பெலிசேயில் உள்ள கராக்கோல், சுனான்துனிச்; குவாதமாலாவில் உள்ள திக்கல் ஆகியவற்றுடன், ஊக்சுமாலும் ஒரு மிக முக்கியமான தொல்லியல் களங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பூக் பகுதியில் அமைந்துள்ள இது இப்பகுதியின் முதன்மைக் கட்டிடக்கலைப் பாணியைக் கூடிய அளவு வெளிப்படுத்தும் மாயா நகரங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் முக்கியத்துவம் காரணமாக இது ஒரு யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மெக்சிக்கோவின் யுக்கட்டான் மாநிலத்தின் தலை நகரமான மெரிடாவுக்குத் தெற்கே அதிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரின் கட்டிடங்கள் அவற்றின் அளவுக்கும், அலங்காரங்களுக்கும் பெயர் பெற்றவை. சக்பெசு என அழைக்கப்படும் பழங்கால வீதிகள் கட்டிடங்களை இணைப்பதுடன், இன்றைய மெக்சிக்கோவில் உள்ள சிச்சென் இட்சா; இன்றைய பெலிசேயில் உள்ள கராக்கோல், சுனன்துனிச்; இன்றைய குவாதமாலாவில் உள்ள திக்கல் ஆகிய நகரங்களை இணைப்பதற்காகவும் அமைக்கப்பட்டன. கட்டிடங்கள், பூக் பாணியில் அமைந்தவை. கரடுமுரடற்ற குட்டையான சுவர்களின் மேற்பகுதி மாயர்களின் குடிசைகளின் அடிப்படையிலான அலங்காரப் பட்டைகளுடன் முடிவடைகின்றது.

Mérida: அருகிலுள்ள இடங்கள்

Cuxtal Ecological Reserve

57.8 km தொலைவில்

Mérida Mexico Temple

69.0 km தொலைவில்

Cathedral of Mérida, Yucatán

69.3 km தொலைவில்

Cámara Houses

70.4 km தொலைவில்

Paseo de Montejo

71.1 km தொலைவில்

Cuca (Maya site)

73.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.