Landmark Wiki

← ஆத்திரேலியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வில்லாந்திரா ஏரிப் பகுதி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

வில்லாந்திரா ஏரிப் பகுதி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வில்லாந்திரா ஏரிப் பகுதி என்றால் என்ன?

வில்லாந்திரா ஏரிப் பகுதி என்பது, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சின் தொலை மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.

வில்லாந்திரா ஏரிப் பகுதி எங்கே உள்ளது?

ஆத்திரேலியா; ஆயத்தொலைவு -34.0000, 143.0000.

இதன் கதை

வில்லாந்திரா ஏரிப் பகுதி என்பது, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சின் தொலை மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும். வில்லாந்திரா ஏரிப் பகுதியே ஆசுத்திரேலியப் பழங்குடிகளான முதி முதி, நியியாம்பர், பர்க்கின்சி ஆகியோரின் மரபுவழிச் சந்திப்பு இடம். 240,000 எக்டேர் (590,000 ஏக்கர்) பரப்பளவு கொண்ட இந்தப் பகுதி, 1981-இல் இடம்பெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 5ம் அமர்வில் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப்பகுதி, இயற்கை அம்சங்களையும், பண்டைய மனித நாகரிகம் சார்ந்த தனித்துவமான எடுத்துக்காட்டுக்களைக் கொண்ட முக்கியமான பண்பாட்டு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. உலகின் மிகப்பழைய சுடலையும் (பிணம் எரியூட்டும் இடம்) இப்பகுதியிலேயே உள்ளது. இப்பகுதியின் ஒரு சிறிய பிரிவு முங்கோ தேசியப் பூங்காவாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்துக்கான உலக பாரம்பரியத் தகுதி 1981-இல் கிடைத்தது. 21 மே 2007ல் 2003ன் சூழல் மற்றும் மரபுரிமைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் கீழ், ஆசுத்திரேலிய தேசிய மரபுரிமைப் பட்டியலில் சேர்த்து அரசிதழ் அறிவிப்பு வெளியானது.

ஆத்திரேலியா: அருகிலுள்ள இடங்கள்

Budj Bim

462.0 km தொலைவில்

பெரும் நீல மலைகள் பகுதி

647.2 km தொலைவில்

Australian Convict Sites

742.7 km தொலைவில்

Gondwana Rainforests

792.4 km தொலைவில்

Tasmanian Wilderness World Heritage Area

994.9 km தொலைவில்

K'gari

1381.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.