Landmark Wiki

← தொராண்டோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஆகா கான் அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

ஆகா கான் அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஆகா கான் அருங்காட்சியகம் என்றால் என்ன?

ஆகா கான் அருங்காட்சியகம் (Aga Khan Museum) என்பது இசுலாமிய கலை, ஈரானிய (பாரசீக) கலை மற்றும் முஸ்லிம் கலாச்சாரத்தின் அருங்காட்சியகமாகும்.

ஆகா கான் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

தொராண்டோ; ஆயத்தொலைவு 43.7253, -79.3322.

இதன் கதை

ஆகா கான் அருங்காட்சியகம் (Aga Khan Museum) என்பது இசுலாமிய கலை, ஈரானிய (பாரசீக) கலை மற்றும் முஸ்லிம் கலாச்சாரத்தின் அருங்காட்சியகமாகும். இது கனடாவின் ஒன்ராறியோவின் தொராண்டோவின் வடக்கு யார்க் மாவட்டத்தில் 77 வின்ஃபோர்ட் டிரைவில் அமைந்துள்ளது. இசுலாமிய கலை மற்றும் பொருள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மேற்கத்திய உலகின் முதல் அருங்காட்சியகமான இது, இளவரசர் அகா கான், இலண்டனில் உள்ள இஸ்மாயிலி ஆய்வுகள் நிறுவனம் மற்றும் இளவரசர் சத்ருதீன் ஆகா கான் ஆகியோரின் தனிப்பட்ட சேகரிப்புகள் உள்ளிட்ட 1,000 க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் உள்ளன. ஆகா கான் அபிவிருத்தி வலையமைப்பின் ஒரு நிறுவனமான ஆகா கான் அறக்கட்டளையின் முன்முயற்சியாக, உலக பாரம்பரியத்திற்கு முஸ்லிம் நாகரிகங்கள் செய்துள்ள கலை, அறிவுசார் மற்றும் விஞ்ஞான பங்களிப்புகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை முன்வைக்க இந்த அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரியத்திற்கு முஸ்லீம் நாகரிகங்கள் செய்த பங்களிப்பைப் பற்றி அதிக புரிதலையும் பாராட்டையும் வளர்ப்பதே இந்த அருங்காட்சியகத்தின் நோக்கமாகும். கல்வி, ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு மூலம், அருங்காட்சியகம் உரையாடலை வளர்க்கும் மற்றும் மக்களிடையே சகிப்புத்தன்மையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஊக்குவிக்கும்.

தொராண்டோ: அருகிலுள்ள இடங்கள்

Prince Edward Viaduct

6.1 km தொலைவில்

அலன் தோட்டம்

7.8 km தொலைவில்

Gardiner Museum

8.0 km தொலைவில்

Casa Loma

8.1 km தொலைவில்

St. Paul's Basilica

8.1 km தொலைவில்

றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம்

8.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.