← New York: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
நியூயார்க் நகரத்திலுள்ள ஒரு அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் என்றால் என்ன?
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (American Museum of Natural History) என்பது உலகிலுள்ள அனைத்து இயற்கை அறிவியல் காட்சிச் சாலைகளுள் மிகப்பெரியதாகக் கருதப் படுகிறது.
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
New York; ஆயத்தொலைவு 40.7808, -73.9744.
இதன் கதை
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (American Museum of Natural History) என்பது உலகிலுள்ள அனைத்து இயற்கை அறிவியல் காட்சிச் சாலைகளுள் மிகப்பெரியதாகக் கருதப் படுகிறது. மனித சமுதாயத்திற்குப் பெருமளவு பயன்பட்டுவரும் இந்த அருங்காட்சியகத்தில் பல தலைசிறந்த அறிவியல் அறிஞர்களும், திறமை மிகுந்த ஆய்வாளர்களும்.. பணி செய்கின்றனர். நியூயார்க் நகரத்திலுள்ள மையப் பூங்காவின் மேற்குப் பகுதியில், இதன் தலைமையகம் அமைந்திருக்கிறது. நியூயார்க்கிலுள்ள ஹண்டிங்டன் (Huntington), புளோரிடாவிலுள்ள பிளாசிட் ஏரிப்பகுதி (Lake Placid), அரிசோனாவின் போர்ட்டல் (Portal), பகாமாத் (Bahamas) தீவுகளைச் சேர்ந்த பிமினித்தீவு (Bimini island) போன்ற இடங்களில் இதன் துணை நிலையங்கள் உள்ளன. ஹேடன் வான் காட்சியகம் (Hayden planetarium), நியூயார்க் தலைமையகத்தில் சிறப்பான பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஓர் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் இயக்குநர் இந்த அறக்கட்டளையினரால் நியமிக்கப்படுகிறார். இங்கு நுாற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அறுநூறுக்கு மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இதனை நல்ல முறையில் நடத்துவதற்குத் தேவையான நிதி, நியூயார்க் பெருநகர மன்றம் அளிக்கும் நல்கை, தனியார் அறக்கட்டளைகள், உறுப்பினர் கட்டணம் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது.
New York: அருகிலுள்ள இடங்கள்
The Dakota
490 m தொலைவில்
மையப் பூங்கா
790 m தொலைவில்
Bethesda Terrace and Fountain
800 m தொலைவில்
பெருநகரக் கலை அருங்காட்சியகம்
970 m தொலைவில்
Lincoln Center
1.2 km தொலைவில்
Frick Collection
1.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.