← New York: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மையப் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மையப் பூங்கா என்றால் என்ன?
மையப் பூங்கா (Central Park) ஐக்கிய அமெரிக்க நியூயார்க் மாநிலத்தில் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் தீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகரியப் பூங்கா ஆகும்.
மையப் பூங்கா எங்கே உள்ளது?
New York; ஆயத்தொலைவு 40.7822, -73.9653.
இதன் கதை
மையப் பூங்கா (Central Park) ஐக்கிய அமெரிக்க நியூயார்க் மாநிலத்தில் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் தீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகரியப் பூங்கா ஆகும். இதன் நிலப்பரப்பு 843 ஏக்கரா (341 எக்டேர்) ஆகும். மேல் மேற்கு பகுதிக்கும் மேல் கிழக்குப் பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது. இதனைச் சுற்றி கிழக்கில் ஐந்தாம் நிழற்சாலையும் (பிஃப்த் அவென்யூ), மேற்கில் மையப் பூங்கா மேற்கு எனப்படும் எட்டாம் நிழற்சாலையும் (எய்த் அவென்யூ), தெற்கில் மையப் பூங்கா தெற்கு எனப்படும் 59ஆம் சாலையும், வடக்கில் மையப் பூங்கா வடக்கு எனப்படும் 110வது சாலையும் உள்ளன தெற்கு வடக்காக 2.5 மைல்கள் (4 கிமீ) நீளமும் கிழக்கு மேற்காக 0.5 மைல்கள் (0.8 கிமீ) அகலமும் உள்ளது. இப்பூங்காவில் ஏரிகள், கோட்டை, பெருநகர கலை அருங்காட்சியகம், மையப் பூங்கா விலங்குக் காட்சிச்சாலை ஆகியன உள்ளன.ஐக்கிய அமெரிக்காவில் மிகுந்த வருகையாளர்களைப் பெறும் நகரியப் பூங்காவாக மையப் பூங்கா விளங்குகின்றது. 2013ஆம் ஆண்டில் 40 மில்லியன் பேர் வருகை புரிந்துள்ளனர். உலகில் மிகுந்த திரைப்பட ஒளிப்பிடிப்புகள் இடம்பெற்ற இடமாகவும் உள்ளது. இந்தப் பூங்கா 1857இல் 778 ஏக்கர்கள் (315 எக்டேர்) நிலப்பரப்பில் நிறுவப்பட்டது.
New York: அருகிலுள்ள இடங்கள்
பெருநகரக் கலை அருங்காட்சியகம்
360 m தொலைவில்
சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம்
550 m தொலைவில்
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
790 m தொலைவில்
Bethesda Terrace and Fountain
1.0 km தொலைவில்
The Dakota
1.1 km தொலைவில்
Frick Collection
1.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.