← ஈராக்கு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அசூர், பண்டைய நகரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அசூர், பண்டைய நகரம் என்றால் என்ன?
அசூர் (Aššur) (அக்காதியம்;'Āšūr; பண்டைய பாரசீகம்: வார்ப்புரு:Script/ஆப்பெழுத்து Aθur, பாரசீகம்: آشور: Āšūr; எபிரேயம்: אַשּׁוּר:Aššûr, அரபி: اشور: Āšūr, குர்திஷ் மொழி: Asûr), தற்கால ஈராக்கில் இந்நகரை (அரபு மொழியில்) குலாத் செர்கத் (Qal'at Sherqat) என அழைக்கப்படுகிறது.
அசூர், பண்டைய நகரம் எங்கே உள்ளது?
ஈராக்கு; ஆயத்தொலைவு 35.4567, 43.2625.
இதன் கதை
அசூர் (Aššur) (அக்காதியம்;'Āšūr; பண்டைய பாரசீகம்: வார்ப்புரு:Script/ஆப்பெழுத்து Aθur, பாரசீகம்: آشور: Āšūr; எபிரேயம்: אַשּׁוּר:Aššûr, அரபி: اشور: Āšūr, குர்திஷ் மொழி: Asûr), தற்கால ஈராக்கில் இந்நகரை (அரபு மொழியில்) குலாத் செர்கத் (Qal'at Sherqat) என அழைக்கப்படுகிறது. அசூர் நகரம், மெசொப்பொத்தேமியாவின் பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365–1050), மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் (கிமு 911–608) தலைநகரமாக விளங்கியது. அசூர் நகரத்தின் இடிபாடுகள், தற்கால ஈராக் நாட்டின் சலாடின் ஆளுநரகத்தில், சிர்காத் மாவட்டத்தில் பாயும் டைகிரிஸ் ஆற்றின் மேற்கில் உள்ளது. அசூர் நகரத்தில், கிமு 2600ம் ஆண்டிலிருந்து, கிபி 14ம் நூற்றாண்டின் மத்தி வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். கிபி 14ம் நூற்றாண்டில் அசூர் நகரத்தின் மீது படையெடுத்து வந்த தைமூர் படைகள், இங்கு வாழ்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் அசிரியக் கிறித்துவர்களைக் கொன்று, அசூர் நகரத்தை இடித்து தள்ளினான். 2003ல் 27வது 27வது உலக பாரம்பரியக் குழு அமர்வு, இடிபாடுகளுடன் கூடிய அசூர் நகரத்தை, உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.
ஈராக்கு: அருகிலுள்ள இடங்கள்
Hatra
51.4 km தொலைவில்
Citadel of Erbil
105.8 km தொலைவில்
சாமர்ரா
150.6 km தொலைவில்
Ahwar of Southern Iraq
594.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.