Landmark Wiki

← பிரசெல்சு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அட்டோமியம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

அட்டோமியம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அட்டோமியம் என்றால் என்ன?

அட்டோமியம் (Atomium) என்பது எக்சுப்போ 58 எனப்படும், 1958 ஆம் ஆண்டின் பிரசெல்சு உலக விழாவுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.

அட்டோமியம் எங்கே உள்ளது?

பிரசெல்சு; ஆயத்தொலைவு 50.8947, 4.3411.

இதன் கதை

அட்டோமியம் (Atomium) என்பது எக்சுப்போ 58 எனப்படும், 1958 ஆம் ஆண்டின் பிரசெல்சு உலக விழாவுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும். ஆன்ட்ரே வாட்டர்கெயின் (André Waterkeyn) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இதன் உயரம் 102 மீட்டர்கள் (335 அடிகள்). இரும்புப் படிகத்தின் அணு அமைப்பை ஒத்ததாக, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது உருக்குக் கோளங்களினால் ஆன இது ஒரு படிக மூல அமைப்பின் 165 பில்லியன் மடங்கு அளவு கொண்டது. ஒவ்வொன்றும் 18 மீட்டர் விட்டம் கொண்ட ஒன்பது கோளங்களில் எட்டுக் கோளங்கள், ஒரு கனக் குற்றி வடிவச் சட்டக வடிவின் எட்டு உச்சிகளிலும் அமைந்துள்ளன. ஒன்பதாவது மூலைவிட்டங்களால் இணைக்கப்பட்டுக் கன வடிவத்தின் மையத்தில் உள்ளது. இக் கன வடிவ அமைப்பின் விளிம்புகள் வழியே அமைந்து கோளங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் குளாய்கள் நகர்படிகளைக் கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஒரு கோளத்தில் இருந்து இன்னொரு கோளத்துக்குச் செல்ல முடியும். இக் கோளங்களுக்குள் காட்சிக் கூடங்களும், பிற பொதுப் பயன்பாட்டு இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உச்சியில் உள்ள கோளத்தில் இருந்து பிரசல்சு நகரின் விரிந்த பார்வையைப் பெற முடியும். நடுவில் நிலைக்குத்தாக அமைந்த குளாய் ஒரு உயர்த்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு செக்கனுக்கு 5 மைல்கள் வேகத்தில் செல்லக்கூடியது.

பிரசெல்சு: அருகிலுள்ள இடங்கள்

Mini-Europe

180 m தொலைவில்

Palace of Laeken

1.6 km தொலைவில்

Church of Our Lady of Laeken

2.0 km தொலைவில்

திரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ்

3.5 km தொலைவில்

Belgian Comic Strip Center

5.0 km தொலைவில்

La Monnaie

5.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.