← போலந்து: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அவுஷ்விட்ஸ் வதை முகாம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அவுஷ்விட்ஸ் வதை முகாம் என்றால் என்ன?
அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு (Auschwitz-Birkenau; ) என்பது 1940–1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜேர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும்.
அவுஷ்விட்ஸ் வதை முகாம் எங்கே உள்ளது?
போலந்து; ஆயத்தொலைவு 50.0358, 19.1783.
இதன் கதை
அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு (Auschwitz-Birkenau; ) என்பது 1940–1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜேர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜேர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கி.மீ. தூரத்தில் அவுஸ்விட்ச் (ஒஸ்வியேச்சிம்) என்ற நகரருகில் அமைந்திருந்தது. இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்; இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்; மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம். முதல் இரண்டும் 1979 இலிருந்து உலக பாரம்பரியக் களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைவிட கிட்டத்தட்ட 40 சிறு முகாம்கள் இம்முகாமைச் சுற்றி 10 கி.மீ. வட்டாரத்தில் இருந்தன. அவுஷ்விட்ஸ் முகாம்களை நேரடியாக மேற்பார்வை செய்தவர், ஹிட்லரின் விசுவாசியான ருடொல்ஃப் ஹஸ் (Rudolf Höß) என்பவர். சுமார் 3 மில்லியன் மக்கள் இம்முகாமில் அவரது மேற்பார்வையில் கொல்லப்பட்டதாக இவர் பின்னர் நடந்த நுரம்பர்க் விசாரணைகளில் தெரிவித்திருந்தார். எனினும் அவர் இவ்வெண்ணிக்கையை பின்னர் 1.1 மில்லியன் எனக் குறைத்திருந்தார். இவர்களில் 90 விழுக்காட்டினர் யூதர்கள் ஆவர்.
போலந்து: அருகிலுள்ள இடங்கள்
Wooden Tserkvas of the Carpathian Region in Poland and Ukraine
144.3 km தொலைவில்
Wooden churches of Southern Lesser Poland
150.6 km தொலைவில்
Centennial Hall (Wrocław)
190.3 km தொலைவில்
Churches of Peace
239.6 km தொலைவில்
Old City (Zamość)
299.6 km தொலைவில்
Medieval Town of Toruń
333.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.