← ஜகார்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள் என்றால் என்ன?
ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகளில், பத்தேவியா (Batavia) அதன் தலைநகரமும், தற்கால சக்கார்த்தாவாக உருவாகிய நகரமும் ஆகும்.
பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள் எங்கே உள்ளது?
ஜகார்த்தா; ஆயத்தொலைவு -6.1348, 106.8132.
இதன் கதை
ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகளில், பத்தேவியா (Batavia) அதன் தலைநகரமும், தற்கால சக்கார்த்தாவாக உருவாகிய நகரமும் ஆகும். இக்கால சக்கார்த்தாவைப் போலவே அக்காலத்தில் பத்தேவியா என்பது நகரத்தை மட்டுமோ அல்லது அதனோடிணைந்த சுற்றுவட்டாரப் பகுதிகளையும் சேர்த்தோ குறிக்கலாம். 1619 இல், அக்கால சயகார்த்தா நகரை இடித்து உருவாக்கப்பட்ட பத்தேவியா, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நவீன இந்தோனீசியா உருவாக வழிகோலியது. பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆசிய வணிக வலையமைப்பின் மையமானது. இப்பகுதியில் கம்பனி, சாதிக்காய், கருப்பு மிளகு, கறுவா, கராம்பு ஆகிய பண்டங்களின் வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்ததோடு, மரபு சாராத காசுப் பயிர்களான காப்பி, தேயிலை, கொக்கோ, இறப்பர், சர்க்கரை, கஞ்சா ஆகியவற்றின் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தது. தங்களுடைய வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியும், 1799 இல் அதை மாற்றீடு செய்த குடியேற்றநாட்டு நிர்வாகமும், படிப்படியாக நகரைச் சுற்றிய பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டன. பத்தேவியா சாவாத் தீவின் வடக்குக் கரையில் பாதுகாப்பான குடாப் பகுதியில், சதுப்பு நிலங்களையும், சிறு குன்றுகளையும் கொண்ட தட்டையான நிலப்பகுதியில் இருந்தது. பத்தேவியா இரண்டு பகுதிகளாக உள்ளது.
ஜகார்த்தா: அருகிலுள்ள இடங்கள்
ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம்
30 m தொலைவில்
வயாங் அருங்காட்சியகம், ஜகார்த்தா
90 m தொலைவில்
நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம், ஜகார்த்தா
150 m தொலைவில்
இந்தோனேசிய வங்கி அருங்காட்சியகம்
280 m தொலைவில்
Gereja Sion
630 m தொலைவில்
Kim Tek Ie Temple
1.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.