Landmark Wiki

← துபாய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புர்ஜ் கலிஃபா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

புர்ஜ் கலிஃபா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புர்ஜ் கலிஃபா என்றால் என்ன?

புர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும்.

புர்ஜ் கலிஃபா எங்கே உள்ளது?

துபாய்; ஆயத்தொலைவு 25.1972, 55.2742.

இதன் கதை

புர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும். 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, 2010, சனவரி 4 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது .. இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றான பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ் வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ் என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் "இமார்" (AMAR) நிறுவனத்தினராவர்.

துபாய்: அருகிலுள்ள இடங்கள்

Dubai Fountain

240 m தொலைவில்

Dubai Opera

290 m தொலைவில்

தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்

480 m தொலைவில்

21 ஆம் நூற்றாண்டுக் கோபுரம்

1.5 km தொலைவில்

Gevora Hotel

1.7 km தொலைவில்

Lighthouse Tower

1.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.