Landmark Wiki

← பிரான்சு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சூவே குகை

வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்களைக் கொண்ட பிரெஞ்சுக் குகை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சூவே குகை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சூவே குகை என்றால் என்ன?

சூவே-பூ-தார்க் குகை (பிரான்சியம்: Grotte Chauvet-Pont d'Arc, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ɡʁɔt ʃovɛ pɔ̃ daʁk]) என்பது தென்மேற்குப் பிரான்சின் அர்தேசு திணைக்களத்தில் அமைந்துள்ள ஒரு குகையாகும்.

சூவே குகை எங்கே உள்ளது?

பிரான்சு; ஆயத்தொலைவு 44.3875, 4.4142.

இதன் கதை

சூவே-பூ-தார்க் குகை (பிரான்சியம்: Grotte Chauvet-Pont d'Arc, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ɡʁɔt ʃovɛ pɔ̃ daʁk]) என்பது தென்மேற்குப் பிரான்சின் அர்தேசு திணைக்களத்தில் அமைந்துள்ள ஒரு குகையாகும். இக் குகை உலகின் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ள உருக்களுடனான குகை ஓவியங்கள் சிலவற்றையும், மேலைப் பழங்கற்கால வாழ்க்கை தொடர்பான ஆதாரங்களையும் கொண்டுள்ளது. இது வலூ-பூ-தார்க் கொமியூனுக்கருகில், ஆர்தேசு ஆற்றின் முன்னைய ஆற்றுப் படுகையின் மேலுள்ள சுண்ணாம்புப் பாறைச் சரிவின் மேல், கோர்சசு த லார்தேசில் அமைந்துள்ளது. டிசம்பர் 18, 1994-இல் கண்டறியப்பட்ட இது மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக் கலையைக் கொண்ட களமாகக் கருதப்படுகிறது. ஐ.நா.வின் பண்பாட்டு முகவர் அமைப்பான யுனெசுகோ, இக் களத்தை சூன் 22, 2014-இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. முதன்முதலில் இக்குகை, மூன்று குகை ஆய்வாளர்களான, எலியட் புரூனல்-தெசாம்ப்சு, கிறித்தியன் இல்லயர் மற்றும் சீன்-மரீ சூவே ஆகியோரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இவர்களுள் சூவேவின் பெயரேஎ இக்குகைக்குச் சூட்டப்பட்டது. ஆறு மாதங்களின் பின் "லெ த்ரோ த பாபா" ("பாபாவின் துளை") என அறியப்படும் ஒரு துளை மிச்செல் ரோசா (பாபா) என்பவரால் கண்டறியப்பட்டது. பின்னொரு நாளில் இக்குழு சூவே குகைக்கு மீண்டும் சென்றது.

பிரான்சு: அருகிலுள்ள இடங்கள்

Causses and Cévennes

77.2 km தொலைவில்

Arles, Roman and Romanesque Monuments

80.8 km தொலைவில்

Hautecombe Abbey

188.6 km தொலைவில்

Canal du Midi

254.7 km தொலைவில்

Prehistoric Sites and Decorated Caves of the Vézère Valley

266.9 km தொலைவில்

Climats, terroirs of Burgundy

299.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.