Landmark Wiki

← New York: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கிரைஸ்லர் கட்டிடம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கிரைஸ்லர் கட்டிடம் என்றால் என்ன?

கிறிஸ்லெர் கட்டிடம் நியூயோர்க் நகருக்குத் தனித்துவமான ஒரு அடையாளச் சின்னமாகும்.

கிரைஸ்லர் கட்டிடம் எங்கே உள்ளது?

New York; ஆயத்தொலைவு 40.7517, -73.9753.

இதன் கதை

கிறிஸ்லெர் கட்டிடம் நியூயோர்க் நகருக்குத் தனித்துவமான ஒரு அடையாளச் சின்னமாகும். 1930ல் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் 1046 அடிகள் (319 மீட்டர்) உயரமானதாகும். மான்ஹற்றனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கிறிஸ்லெர் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்காகக் கட்டப்பட்ட இது, இப்பொழுது டி.எம்.டப்ளியூ (TMW) ரியல் எஸ்டேட் நிறுவனத்தாலும் (75%), திஷ்மான் ஸ்பேயர் ப்ரொப்பர்ட்டீஸ் நிறுவனத்தாலும் (25%) கூட்டாக வாங்கப்பட்டுள்ளது. கிறிஸ்லெர் கட்டிடம், வில்லியம் ஹெச் ரெனோல்ட்ஸ் என்னும் ஒப்பந்தக்காரருக்காக, வில்லியம் வான் அலன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவ் வடிவமைப்புப் பின்னர் வால்டெர் கிறிஸ்லெர் என்பவரால் அவரது நிறுவனத்தின் தலைமையகத்துக்காக வாங்கப்பட்டது. இக் கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில், உலகின் உயர்ந்த வானளாவியெக் கட்டுவது தொடர்பாக, கட்டிடம் கட்டுபவர்களிடையே கடும் போட்டியிருந்தது. கிறிஸ்லெர் கட்டிடம் வாரத்துக்கு 4 தளங்கள் வீதம் கட்டப்பட்டது. இக் கட்டுமானத்தின் போது ஒரு வேலையாள் கூட பணிக்காலத்தில் இறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிடம் கட்டிமுடிப்பதற்குச் சற்றுமுன், ஹெச். கிரெய்க் செவெரன்ஸின், 40 வால் தெருவிலுள்ள கட்டிடத்துடன் சம அளவில் இருந்தது.

New York: அருகிலுள்ள இடங்கள்

கிராண்ட் சென்ட்ரல் முனையம்

200 m தொலைவில்

Waldorf Astoria New York

530 m தொலைவில்

New York Public Library Main Branch

580 m தொலைவில்

Morgan Library & Museum

580 m தொலைவில்

Rockefeller Foundation

680 m தொலைவில்

Bryant Park

770 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.